Food
நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிக்க ரத்தத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட வேண்டும்.
ரத்தத்தை சுத்திகரிக்கும் உணவுகளை உண்பதால் சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், நிணநீர் மண்டலம் நன்றாக வேலை செய்யும்.
நச்சுகளிலிருந்து கல்லீரலைப் பாதுகாப்பதன் மூலம் பூண்டு நம் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதன் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் குடல்களை கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கிறது.
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள் அதிகம் இருப்பதால், ரத்தத்தை எளிதில் சுத்திகரிக்கும்.
பீட்ரூட்டில் உள்ள சுத்திகரிப்பு பண்புகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் நச்சு நீக்கும் நொதிகளை உற்பத்தி செய்து, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
பச்சை இலை காய்கறிகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டைக்கோஸ், கீரை, பாசிப்பருப்பு ஆகியவை ரத்த ஓட்டத்தை பராமரிக்கும்.
நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும் நச்சுகளை அகற்றும். சருமத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அவகேடாவில் உள்ளது.
கால்சியம், ஒமேகா -3 அமிலங்கள், வைட்டமின் சி, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் ப்ரோக்கோலியில் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.