Food
அக்னி நட்சத்திரம் மே 04ஆம் தேதி தொடங்கிவிட்டது. கோடையில் சாப்பிடக் கூடாத 10 உணவுகளை இங்கு காணலாம்.
கடுமையான கோடை காலத்தில் நீரேற்றமாக இருக்க வேண்டும். ஆகவே காபியை முற்றிலும் தவிர்க்கவும் அல்லது குறைவாக அருந்தவும்.
ஊறுகாயில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் உடலில் நீர்ச்சத்து குறையும். கோடையில் ஊறுகாயை அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படலாம்.
பாதாம், வால்நட், முந்திரி போன்ற உலர் பழங்கள் மிகவும் சத்தானது. இவை கோடையில் உடல் வெப்பநிலையை உயர்த்தும், எரிச்சலையும், சோர்வையும் ஏற்படுத்தும்.
கோடையில், மில்க் ஷேக்குகள் நாவின் சுவை மொட்டுகளை திருப்தியாக்கும். ஆனால் அதிக சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும்.
காரமான உணவுகளில் காணப்படும் கேப்சைசின், பித்தத்தை பாதிக்கும். உடல் சூடு, அதிக வியர்வை, நீரிழப்பு ஆகியவையும் ஏற்படுத்துகிறது.
கோடையில் வறுத்த கறி (grilled meat) சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். உடல் வெப்பநிலையையும் அதிகரிக்கிறது.
பஜ்ஜி, சிப்ஸ், சமோசா, சாட், பிரஞ்சு பிரை, போன்ற உணவுகள் அனைத்தும் நீரழிவை ஏற்படுத்தும். கோடையில் ஜீரணிக்கவும் சிரமம்.
சர்க்கரை, பிற வேதி பொருட்கள் அதிக அளவில் காணப்படும் சோடா உங்கள் உடலை விரைவாக நீரிழப்புக்கு தள்ளிவிடும்.
கோடையில் மது குடிப்பதால் தலைவலி, வாய் வறட்சி, உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற நீரிழப்பு அறிகுறிகள் ஏற்படும்.
கோடையில் உணவுகளில் அதிக உப்பு சேர்ப்பதால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் சோம்பல், மயக்கம், சோர்வு ஏற்படும்.