Food

பழங்கள்

பழக்கடையில் விற்கும் மாம்பழம், ஆப்பிள், கிவி ஆகிய பழங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். நிறைய பேருக்கு அதன் காரணம் தெரியாது. 

பழங்களில் ஸ்டிக்கர்

கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து வாங்கும் பழங்களின் மீது தான் குட்டியாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள். அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன. 

தரம்

பழங்களின் தரத்தை வெறும் ஸ்டிக்கர்கள் மூலம் அறிய முடியுமா? ஆம். ஆனால் அது இந்திய நடைமுறை கிடையாது. 

ஸ்டிக்கர்

வெளிநாடுகளில் பழங்களுடைய விலை, தரம் ஆகியவை அறிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. பிறகு ஏன் இந்தியாவில் நாம் வாங்கும் பழங்களும் அப்படி உள்ளது? 

வியாபார யுக்தி

ஸ்டிக்கர் ஒட்டிய பழங்களை தரத்தில் உயர்ந்தவை என்ற போலி பிம்பத்தை காட்டி விற்பது வாடிக்கையாகிவிட்டது. 

பழங்களின் குறைபாடு

இந்தியாவில் சேதமடைந்த பழங்களை விற்க, அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதாகவும் தகவல் கிடைக்கின்றன. 

ஸ்டிக்கர் டேஞ்சர்

பழங்களில் உள்ள ஸ்டிக்கரில் எண் 3 அல்லது 4 என்ற இலக்கத்தில் ஆரம்பித்தால் பூச்சிகொல்லிகள் மற்றும் இரசாயன மருந்துகள் அதில் கலந்திருப்பதாக அர்த்தமாம். 

உடலுக்கு நல்லது

ஸ்டிக்கரில் 9 என்ற இலக்கத்தில் தொடங்கினால் அது இயற்கையாக விளைய வைத்த பழம். உடலுக்கும் நல்லது. 

நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியா உள்பட பல நாடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி வாடிக்கையாளர்களை ஏமாற்றும்போக்கு உள்ளது. ஸ்டிக்கர் பசையில் உள்ள ரசாயனங்களும் பழத்தின் தரத்தை பாதிக்கும். 

எச்சரிக்கை

கடைகளில் பழங்கள் வாங்கும்போது இனிமேல் கவனமாக வாங்குங்கள். 

Find Next One