Food

வெந்தயம் நன்மைகள்

கோடைகாலத்தில் உடல் சூட்டு பிரச்சனைகளான நீர்க்கடுப்பு, வயிற்று வலி, சரும நோய்கள் வரும். வெந்தயம் இந்த பிரச்சினைகளை தீர்க்கும். 

 

ஊட்டச்சத்து

வெந்தயத்தில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மிகுந்துள்ளன. இதனால் செரிமானம் முதல் சரும அழகு வரை பல நன்மைகக் கிடைக்கும்.  

உடல் வெப்பம்

கோடையில் நம் உடல் வெப்பம் தணிய வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயம் உண்ணுங்கள். உடனே தண்ணீர் குடித்தால் வெப்பம் தணியும்.  

கொலஸ்ட்ரால்

வெந்தயத்தில் உள்ள நாரின்ஜெனின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வரும். 

செரிமானம் மேம்படும்

வெந்தயம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் தீரும். வாய்வு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும். 

 

சர்க்கரை வியாதி

நீரிழிவு நோயாளிகள் நாள்தோறும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். 

பாலியல் பிரச்சனை

பாலியல் பிரச்சினைகளை சந்திக்கும் ஆண்கள் வெந்தயம் சாப்பிட்டால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு கூடும். ஆண்மைத்தன்மை மேம்படும். 

வீக்கம்

வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் உள்ள வீக்கம், அழற்சியைக் குறைக்கும். 

மூட்டு வலி


நாள்தோறும் வெந்தயத்தை உண்பதால் மூட்டுவலி சார்ந்த பிரச்சனை தீரும். 

தினமும் வெந்தயம்

உடல் உஷ்ணம், செரிமானம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக தினமும் காலையில் வெந்தய நீர் அருந்துங்கள். கோடைகால கொடை இது!   

ஆயுர்வேதம் சொல்லும் கோடைகால உணவுகள்.. உடல் குளுமைக்கு இது முக்கியம்!