Food
ஏலக்காயில் புரத மாவுச்சத்து நார்ச்சத்து கால்சியம் உட்பட்ட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். மேலும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய வயிற்று தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.
ஏலக்காய் இயற்கையாகவே அதிக வாசனையுடையது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், பற்களில், ஈறுகளில் பிரச்சினை மற்றும் வாய்ப்பு உள்ளவர்கள் ஏலக்காய் தண்ணீர் குடிப்பது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏலக்காய் தண்ணீர் குடிப்பது அவசியம். இவற்றால் தொண்டை பிரச்சனை, வைரஸ் காய்ச்சல் குணப்படுத்த முடியும்.
சுற்றுச்சூழல் காரணமாக அடிக்கடி மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நீரை காய்ச்சி குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு அதிக சூடு அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக தொடர் இருமல் இருக்கும். இந்த நீரைக் குடித்தால் உடனடி பலன் கிடைக்கும்
நம் உடல் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்று இரத்த சோகை. இப்பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும்.
ஏலக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தை குறிக்கும்.