அரிசி சாதத்துடன் சப்பாத்தியை சாப்பிடக் கூடாது. இந்த இரண்டிலும் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் இருப்பதால், வாய்வு பிரச்சனை வரும்.
உருளைக்கிழங்கு
அரிசி சாதம், பருப்பு குழம்பு, பொரித்த உருளைக்கிழங்கு ஆகியவை ஒன்றாக உண்ணும்போது நல்ல ருசியாக இருக்கும். ஆனால் இப்படி உண்பதால் எடை அதிகமாகும். இந்த உணவை அளவாக உண்ணுங்கள்.
சூடான தேநீர்
சாதம் சாப்பிட்ட பிறகு உடனடியாக தேநீர் அருந்தக் கூடாது. வாய் தொல்லை ஏற்படும்.
பழங்கள்
அரிசி சாதத்துடன் பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இதனால் செரிமானகோளாறுகள் வரும்.
மாவுச்சத்து
மாவுச்சத்து அதிகமுள்ள சோளம், பட்டாணி, உருளைக்கிழங்கு சாப்பிடும்போது, உங்கள் உணவில் அரிசியை குறையுங்கள். தயிர் மாதிரியான புளித்த உணவுகளை சேர்க்கலாம்.
சாலட்
சாலட் உடலுக்கு நல்லது. ஆனால் செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் அரிசி சாதத்துடன், சமைக்காத உணவு பொருள்களால் ஆன சாலட்டை சாப்பிடும்போது ஜீரணிக்க கடினமாக உள்ளது.
பதப்படுத்தப்பட்ட அரிசி
சுத்திகரிக்கப்பட்ட அரிசியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்காது. அதனால் ப்ரவுன் அரிசியை உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
சுத்தம்
சமைப்பதற்கு முன் அரிசியை நன்றாக கழுவி, அதிலுள்ள தூசி, உமி போன்றவைகளை நீக்குங்கள்.
அரிசி சாதம்
சாதம் சாப்பிட்ட பிறகு வாயு, செரிமான கோளாறு ஏற்பட்டால், உணவு பழக்கத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.