கோடைகாலம் வந்தாலே மாம்பழ சீசன் தான். தற்போது சந்தையில் கிடைக்கும் மாம்பழங்களில் கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை எளிதில் கண்டறியும் பயனுள்ள டிப்ஸ் உள்ளே..
Tamil
கால்சியம் கார்பைடு
மாம்பழங்களுடன் கால்சியம் கார்பைடு என்ற வேதிப்பொருளை வைத்து செயற்கையாக பழுக்க வைக்கப்படுகின்றன. இதனால் பழத்தின் தரம் பாதிக்கப்படுகிறது.
Tamil
எத்திலீன் வாயு
எத்திலீன் வாயுவைப் பயன்படுத்தியும் மாம்பழங்கள் விரைவாக பழுக்க வைக்கப்படுகின்றன.
Tamil
உடல்நலக் கோளாறு
கெமிக்கல் மூலம் பழுத்த மாம்பழங்கள் பேதி, தோல் அரிப்பு, சுவாச கோளாறு, இரைப்பை பிரச்சனை போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
Tamil
மாம்பழச் சாறு
கெமிக்கல் மூலம் பழுத்த பழத்தை விட இயற்கையாக பழுத்த மாம்பழத்தில் சாறு அடர்த்தி அதிகமாக இருக்கும்.
Tamil
சோதனை
மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போடுங்கள். நீரில் மிதந்தால் அவை கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டவை. மூழ்கினால் தானாக பழுத்தவை.
Tamil
கெமிக்கல் மாம்பழம்
கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கும் மாம்பழங்களின் மீது பச்சை நிற புள்ளிகள், வெள்ளை அல்லது நீல புள்ளிகள் இருக்கும். அதை வாங்க வேண்டாம்.
Tamil
நிறம்
இயற்கையில் பழுத்த மாம்பழங்கள் பச்சை, மஞ்சள் ஆகிய நிறத்தில் கலந்து இருக்கும். கெமிக்கல் மாம்பழம் மேலே முழுக்கவும் மஞ்சள் நிறமாக இருக்கும்.
Tamil
புற்றுநோய்
கால்சியம் கார்பைடு என்ற வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
Tamil
சத்துக்கள்
இயற்கையில் பழுத்த மாம்பழங்களில் வைட்டமின் ஏ, சி ஆகிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் தாராளமாக கிடைக்கும். கவனமாக வாங்கி உண்ணுங்கள்.