Relationship

டாக்சிக் உறவு

உங்கள் துணையுடன் பேசிய பிறகு மகிழ்ச்சியாக இல்லாமல், மன அழுத்தத்திற்கு போய் சோகமாக மாறுகிறீர்களா? அந்த உறவு தான் டாக்சிக். 

சுயமுடிவு

எல்லா முடிவுகளையும் உங்கள் துணையே எடுப்பார்கள். உடை முதல் உணவு வரை எல்லா விஷயங்களிலும் உங்கள் விருப்பங்களை மீறி அவர்களே முடிவு செய்வது டாக்சிக் உறவு தான். 

 

வளர்ச்சி

உங்களுடைய வளர்ச்சியை குறித்து சிந்திக்காமல், அவர்களுடைய வசதிக்கேற்ப உங்களை மாற சொல்வார்கள். 

உணர்வு துஷ்பிரயோகம்

உங்களுடைய எல்லா செயல்களையும் குற்றப்படுத்தி நீங்கள்தான் தவறு செய்வது போல் பிம்பத்தை உருவாக்குவார்கள். 

மரியாதை

மரியாதை எல்லா உறவுகளிலும் அவசியமானது. உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்காத பட்சத்தில் அது டாக்சிக். 

செக்ஸ்

காதல், அன்பு, அரவணைப்பு, மரியாதை, உங்கள் விருப்பம் என எந்த விஷயங்களையும் குறித்து அக்கறை செலுத்தாமல் காமத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதும் டாக்சிக்தான். 

அவமானம்

உங்களை தொடர்ந்து அவமானப்படுத்துவதும், உணர்வு, உடல்ரீதியாக கொடுமைப்படுத்துவதும் டாக்சிக் உறவுதான். 

விட்டுக்கொடுத்தல்

எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் சுயநலமாகவே முடிவு எடுப்பார். உறவில் எப்போதும் ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுப்பது தவறு. 

மனம் திறத்தல்

துணையிடம் வெளிப்படையாக பேசும் சுதந்திரம் முக்கியம். உங்களால் அவரிடம் வெளிப்படையாகவும் மனம் திறந்தோ பேச முடியாது என்றால் அந்த உறவு எப்படியானது? 

நண்பர்

உங்களுடைய பெஸ்ட் பிரெண்ட் / நலம் விரும்பிகள் உங்கள் துணையை குறித்து எதிர்மறையாக கூறினால் அதில் உண்மையுள்ளதா? என்பதை சிந்தித்து பாருங்கள். 

உடலுறவு வைக்காவிட்டால் இத்தனை நன்மைகள்!! அட! இது தெரியுமா?

மருமகள்கள் ஏன் மாமியார் வெறுக்கிறார்கள்? இத்தனை காரணம் இருக்கா!