Relationship

மாமியாரை வெறுக்கும் பெண்கள்

திருமணமான பெண்கள் ஏன் மாமியாரை வெறுக்கிறார்கள். சிறந்த மருமகளாக இருக்க முயற்சி செய்வதில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. 

மாமியார் காரணமா?

மாமியார், மருமகள் சண்டைக்கு மிக முக்கியக் காரணம் மாமியாரின் பாதுகாப்பின்மை (insecurities) உணர்வு. மகனை தன்னிடமே வைத்திருக்க நினைக்கும் மனபாங்கு. 

வெறுமை

புது மருமகள் வீட்டுக்கு வரும்போது மாமியார் வெறுமையாக உணர்கிறார். மருமகள் தங்களிடமிருந்து மகனைப் பறித்துவிடுவாளோ என்ற பயம். 

மருமகளுக்கு அங்கீகாரம்

மருமகள் என்ன செய்தாலும் திருப்திபடையாமல் அவளை குறை சொல்லி கொண்டே இருப்பது. அவளுடைய சுயமரியாதையை சீண்டி அவமானம் செய்தல்.

வீண் சண்டை

மாமியார் தன் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே சண்டையை ஏற்படுத்துகிறார். இதனால் மருமகளுக்கு வெறுப்பு வருகிறது. 

மாமியாரின் கட்டுப்பாடு

மருமகளின் ஒவ்வொரு அடியையும் கட்டுப்படுத்த சில மாமியார் முயற்சி செய்வார்கள். பல கட்டுப்பாடுகள் மீண்டும் மீண்டும் விதிக்கப்படுகிறது.  

அம்மா - அப்பாவும் காரணம்

மாமியார் தன் மருமகள் மீது வெறுப்பாகி அவளுடைய அப்பா, அம்மாவை திட்டுவது. எப்போதும் வன்மத்துடன் நடந்து கொள்வது.

 

மருமகளின் எண்ணம்

தொடர் தொந்தரவால் மாமியார்தான் தன் காதலுக்கு வில்லி என மருமகள் நினைக்கிறாள். அதனால் மாமியாரை மதிப்பதில்லை. 

மருமகளை அந்நியமாக்கும் மாமி

மருமகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மாமியார் அதிகாரம் செய்வது. மருமகளின் சுதந்திரம் பறிக்கப்படுவது. 

மாமியார் மருகள் உறவு

தன் வீட்டுக்கு வாழ வரும் பெண்ணை மருமகளாக நினைக்காமல் தன் மகளாக நினைத்தால் மாமியார் மருமகள் உறவு மேம்படும்.