எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா.? மருத்துவர்கள் சொல்லும் உணவு வகைகள் இதுதான்!!
காலை மற்றும் இரவு நேரங்களில் உண்ண வேண்டிய உணவுகள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.
நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் உடல் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளது. கூடுதலாக, நமது வயது, பாலினம் மற்றும் உடல் எடையை மனதில் வைத்து சரியான அளவில் உணவை உட்கொள்வது முக்கியம் ஆகும்.
ஆரோக்கியமான மற்றும் நல்ல உணவை உட்கொள்வது நமது உடலுக்கு அவசியமான ஒன்றாகும். இது மிகவும் எளிமையாக தோன்றலாம். ஆனால் ஒரு நல்ல உணவின் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று சரியான நேரத்தில் சரியான உணவை உண்பது தான்.
எனவே, எந்த உணவை எப்போது சாப்பிடலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். ஆரோக்கியமான உடல் மற்றும் சருமத்தை அடைய காலை மற்றும் மாலை நேரங்களில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஆப்பிள்கள்:
ஆப்பிளை பகலில் சாப்பிட வேண்டும் என்றும், காலையில் ஆப்பிள் சாப்பிடுவது நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் தேங்கிய உப்பை நீக்குவதற்கு உதவுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சியா விதைகள்:
சியா விதைகளை இரவில் சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை படுக்கைக்கு முன் பசியைக் குறைக்க உதவுகின்றன. அதுமட்டுமில்லாமல், சிறந்த தூக்கத்தை தர இவை உதவும் என்று கூறப்படுகிறது.
வெள்ளரி:
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது. எனவே இது பகல்நேரத்திற்கு ஏற்றது.
கெமோமில் தேயிலை:
கெமோமில் தேயிலை உள்ள தேநீரை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். கெமோமில் தேநீர் இரவில் தூக்கத்தைத் தூண்டும் ஒரு கலவையான அபிஜெனின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றம் இருக்கிறது.
தேநீர் / காபி:
டீ மற்றும் காபி பகலில் குடிக்க வேண்டும். ஆனால் காலையில் முதல் விஷயமாக டீ மற்றும் காபியை அருந்தக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். டீ அல்லது காபியின் அளவு மனநிலையை மேம்படுத்துகிறது. காஃபின் உடலை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
மஞ்சள் பால்:
தூக்கத்தை ஊக்குவிக்கும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் பாலில் இருப்பதால் இந்த பானம் இரவு நேரத்திற்கு ஏற்றது.
ஆம்லா சாறு:
வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரமான ஆம்லா சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் மற்றும் தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதனை பகல் நேரத்தில் பருக வேண்டும்.
பூசணி விதைகள்:
இந்த விதைகளிலும் டிரிப்டோபான் உள்ளது, இது மூளைக்கு ஓய்வு மற்றும் மகிழ்ச்சியான உணர்வை வழங்குகிறது. நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
பாதாம்:
காலையில் பாதாம் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்.டி.எல்) அளவு குறைகிறது. அதுமட்டுமின்றி எடை குறைப்புக்கு உதவுகிறது.
பிஸ்தா:
நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், சில பிஸ்தாக்களை சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இவை வைட்டமின் பி 6 மற்றும் மெக்னீசியம் நிரம்பியுள்ளன. நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?
இதையும் படிங்க..20 ரூபாய் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது!.. யார் இந்த முனீஸ்வர் சந்தர் தாவர்.? வியக்கவைக்கும் வரலாறு !!