20 ரூபாய் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது!.. யார் இந்த முனீஸ்வர் சந்தர் தாவர்.? வியக்கவைக்கும் வரலாறு !!
மத்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ விருது பட்டியலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசால் பல்வேறு துறை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளை சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்றவைக்கு வழங்கப்படுகின்றன.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. 76 வயது வயதான முனீஸ்வர் சந்தர் தாவர் தான் அவர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவருக்கு மருத்துவ துறையில் சாதனை படைத்ததற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ORS கரைசல் கண்டுபிடித்த டாக்டர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது ! யார் இவர்.? முழு விபரம்
மருத்துவர் முனீஸ்வர் சந்தர் தாவர் தனது நோயாளிகளிடம் இருந்து ரூபாய் 20 மட்டுமே சிகிச்சைக்கு பெறுகிறார். அதுமட்டுமின்றி இவர் 1971 போர் வீரர் ஆவார். ஒரு நாளைக்கு சுமார் 200 நோயாளிகளைப் பார்த்து வருகிறார். மேலும் அவர்களிடமிருந்து 20 ரூபாய் மட்டுமே சிகிச்சைக்காக வாங்குகிறார். 2010 ஆம் ஆண்டு வரை, வெறும் ரூ.2 கட்டணமாக வசூலித்து வந்தார்.
ஜனவரி 16, 1946 இல் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பிறந்த டாக்டர் தாவர், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். 1967 இல் ஜபல்பூரில் தனது மருத்துவ படிப்பை (எம்பிபிஎஸ்) முடித்தார். 1971-ல் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின் போது டாக்டர் தாவர் இந்திய ராணுவத்திலும் ஒரு வருடம் பணியாற்றினார்.
இதையும் படிங்க..பத்ம விருதுகள்: முலாயம் சிங் யாதவ், சுதா மூர்த்தி, கீரவாணி!.. யார் யாருக்கு விருது? முழு பட்டியல் !!
சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மலிவு விலையில் மருத்துவ சேவையை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்ட முடிவு செய்தார். டாக்டர் தாவர் 1972 ஆம் ஆண்டு முதல் ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்க பாடுபட்டு வருகிறார். டாக்டர் தாவர் மக்களுக்கு 2 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். தற்போது அவர் தனது கட்டணமாக 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்.
அவரது குடும்பத்தினர் இவ்வளவு குறைந்த தொகையை கட்டணமாக வசூலிக்க ஒப்புக்கொண்டார்களா என்று கேட்டபோது, டாக்டர் தாவர் அவரது குடும்பத்தினர் அதைப் பற்றி விவாதித்ததாகவும், ஆனால் அவரது முடிவை ஒருபோதும் மறுக்கவில்லை என்றும் கூறினார்.
மக்களுக்கு சேவை செய்வதே தனது ஒரே நோக்கம், எனவே குறைந்த கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்ததாக என்று அவர் கூறினார். பத்மஸ்ரீ விருது குறித்துப் பேசிய டாக்டர் தாவர், இது அவரது கடின உழைப்பு மற்றும் அவர் உதவ முயற்சிக்கும் மக்களின் ஆசீர்வாதத்தின் விளைவு தான் என்று கூறினார்.
இதையும் படிங்க..முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?
இதையும் படிங்க..நாங்கள் வாரிசுகள் தான்.! ஆனா எதற்கு தெரியுமா? லிஸ்ட் போட்டு தெறிக்கவிட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் !!