Asianet News TamilAsianet News Tamil

முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? கவலைப்படாதீங்க.. இதை தினமும் சாப்பிடுங்க..!!

முடி உதிர்தல் பிரச்சனையால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த விதையை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும், சில நாட்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள். அது என்ன விதை? எப்படி சாப்பிடுவது? என்பதை பார்க்கலாம் வாங்க..

Eat chironji seeds daily to prevent hair fall
Author
First Published May 27, 2023, 8:35 PM IST

பெரும்பாலான பெண்கள் தலைமுடி உதிர்தல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர்.  முடி உதிர்தல் காரணமாக, முடி மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும். இதன் காரணமாக தோற்றமும் மோசமடைகிறது. பெரும்பாலும் பெண்கள் முடி உதிர்வை போக்க பல்வேறு வகையான சீரம், எண்ணெய் மற்றும் பல முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகின்றனர்.  ஆனால் உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால், உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், உங்கள் முடி உதிர்தல் பிரச்சனையை முடி பராமரிப்பு பொருட்களால் கூட தீர்க்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
முடி கொட்டினாலும் சரி, சரும பிரச்சனையாக இருந்தாலும் சரி, அது நமது உணவு முறையோடு நேரடியாக தொடர்புடையது.  ஆரோக்கியமான முடிக்கு நல்லதாகக் கருதப்படும் பல விதைகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.  இவற்றில் உள்ள சத்துக்கள் முடியை வலுவாக்கி, முடி உதிர்வு பிரச்சனையை குறைக்கிறது.  அப்படிப்பட்ட ஒரு விதையைப் பற்றி இங்கே காணலாம்.

என்ன விதை அது?

சாரைப் பருப்பு (chironji seeds) முடி உதிர்வை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  சாரைப் பருப்பு பயன்படுத்துவதால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.  ஆம், சாரைப் பருப்பு சுவையை நீங்கள் அடிக்கடி இனிப்பு உணவுகளில் சேர்த்து ருசித்திருப்பீர்கள். நிபுணர்களின் ஆலோசனையின்படி, சாரைப் பருப்பை உட்கொண்டால் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

இதையும் படிங்க: சந்தேகம் உறவின் அடித்தளம்: உங்கள் துணையே சந்தேகிக்கிறீர்களா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!
 
நன்மைகள் என்ன?

  • இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சாரைப் பருப்பில் ஏராளமாக காணப்படுகின்றன. 
  • இதில் நல்ல கொழுப்புகளும் ஏராளமாக உள்ளது.
  • புரோட்டீன் முடி ஆரோக்கியத்திற்கு அவசியம் மற்றும் அதில் அதிக புரதம் உள்ளது. முடியை வலுப்படுத்தவும், உடைவதைத் தடுக்கவும் இது நல்லது என்று கருதப்படுகிறது.
  • சாரைப் பருப்பு சாப்பிடுவது முடி உதிர்வை குறைக்கிறது.
  • சாரைப் பருப்பில் உள்ள பண்புகள் முடி வேர்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • சாரைப் பருப்பு சாப்பிடுவதுடன், அதன் எண்ணெயையும் தடவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
  • சாரைப் பருப்பு ஹேர் மாஸ்க் முடியை சீரமைப்பதற்கு நல்லது என்று கருதப்படுகிறது.  
  • முடியைத் தவிர, செரிமான அமைப்புக்கும் நல்லது. 
  • சாரைப் பருப்பு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடலுக்கு வலிமை அளிக்கிறது

சாரைப் பருப்பு எப்படி சாப்பிடுவது?

  •  2 டீஸ்பூன் சாரைப் பருப்பை இரவில் ஊற வைக்கவும்.
  •  காலையில் எழுந்ததும் சாப்பிடுங்கள்.
  •  இதை தொடர்ந்து 4 வாரங்கள் செய்யவும்.
  •  முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Follow Us:
Download App:
  • android
  • ios