எப்பவும் அரிசி மாவுல இடியாப்பம் செய்யாம..ஒருமுறை ரவை வச்சு செஞ்சு சாப்பிடுங்க.. ருசியா இருக்கும்!
Rava Idiyappam Recipe : இப்போது இந்த ரவை இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
எப்போதும் காலை வீட்டில் இட்லி தோசை தான் செய்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இடியாப்பம் செய்து கொடுங்கள். ஆனால், இடியாப்பம் செய்வதற்கு மாவிலை என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை இருக்கிறதா? அப்படி இருந்தால் அதில் இடியாப்பம் செய்து கொடுங்கள். இந்த இடியாப்பம் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும் மற்றும் இதை சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த ரவை இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சுவையான.. சத்தான.. பாலக்கீரையில் பூரி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!!
ரவை இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய தேங்காய் -
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
இதையும் படிங்க: இட்லி தோசைக்கு ஒருமுறை இந்த குருமா செஞ்சு சாப்பிடுங்க.. செம்மையா இருக்கும்!!
செய்முறை:
ரவை இடியாப்பம் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் உப்பு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். ரவை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு தட்டை கொண்டு பாத்திரத்தில் மூடி வையுங்கள். பிறகு கை பொறுக்கும் சூட்டிற்கு இருக்கும் போது மாவை கையல் நன்கு பிசையுங்கள். இப்போது மாவை இரண்டாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இடியாப்ப உலக்கை எடுத்து அதில் எண்ணெய் தடவி அச்சுவைத்து பிசைந்து வைத்த மாவை அதில் வைக்கவும். பிறகு இட்லி தட்டில் குழியில் கொஞ்சமாக துருவிய தேங்காயை சேர்த்து அதன் மேல் இடியாப்பத்தை பிழிய வேண்டும். பிறகு அதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து பார்த்தால் சுவையான ருசியான ரவை இடியாப்பம் ரெடி. இந்த இடியாப்பத்தை நீங்கள் தேங்காய் பால், பாசிப்பயிறு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D