Asianet News TamilAsianet News Tamil

கோடை வெயிலில் சிறுநீரக தொற்றுகளை அண்டவிடாமல் தடுக்கும் "வெள்ளரிக்காய் மில்க் ஷேக்" ட்ரை பண்ணி பாருங்க..!

இன்று வெள்ளரிக்காய் வைத்து அருமையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மில்க் ஷேக் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

Cucumber Milkshake Recipe  for this Summer
Author
First Published Mar 13, 2023, 10:38 AM IST

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வெயிலினால் பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் குறிப்பாக சிறுநீரகத் தொற்றுகள் நம்மை பெருமளவில் பாதிக்கும். அப்படிப்பட்ட நோய்களில் இருந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை அதிலும் குறிப்பிட்டு சொன்னால் நீராகாரங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் .

இப்படி நீராகாரங்களை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக எரிச்சல், சிறுநீரக தொற்று போன்றவற்றை நெருங்க விடாமல் நாம் தடுக்க முடியும். மேலும் சிறுநீரக கற்களை கரைக்கவும் இது பெரிதும் பயன்படுவதோடு உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உடல் எடையை குறைக்கவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி நீராகாரங்கள் என்று சொல்லும் போது பழச்சாறு ,இளநீர், நீர்மோர், மில்க் ஷேக் போன்றவற்றை அதிகமாக எடுத்து வேண்டும். அந்த வகையில் இன்று வெள்ளரிக்காய் வைத்து அருமையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மில்க் ஷேக் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் - 3
பால் - 1 1/ 2 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
ஏலக்காய் - 7
ஐஸ்கட்டி தேவையான அளவு.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் கேழ்வரகு கூழ் !

செய்முறை :

முதலில் வெள்ளரிக்காயை அலசி அதன்தோல் நீக்கி [மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிக்சி ஜாரில் ஏலக்காய்களை சேர்த்து அதில் சர்க்கரையையும் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும் . சர்க்கரை நன்கு பவுடர் ஆன பிறகு இதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்சி ஜாரில் சிறிது பால் ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக மிக்சி ஜாரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு ஒரு சுற்று சுற்றி அரைத்தால் சுவையான வெள்ளரிக்காய் மில்க் ஷேக் ரெடி!. இப்போது இதனை ஒரு கண்ணாடி க்ளாசில் ஊற்றி மேற்பரப்பில் லெமன் மற்றும் புதினா வைத்து அலங்கரித்து பரிமாறினால் சூப்பராக இதனை அருந்தலாம். சர்க்கரையை விரும்பாதவர்கள் தேன் கலந்து சாப்பிடலாம். இந்த கோடை காலம் முடியும் வரை வாரம் இரு முறை செய்து வந்தால் உடலை மிகக் குளிர்ச்சியாகவும் அதே நேரத்தில் சிறுநீரக பிரச்சனையை அண்ட விடாமலும் இருக்கும். நீங்களும் இதனை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பார்த்து அசத்துங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios