10 நிமிடத்தில் உருளைக்கிழங்கில் மொறுமொறுனு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. உடனே செஞ்சி பாருங்க..!
Potato Evening Snacks Recipe : இந்த கட்டுரையில், ஈவினிங் ஸ்நாக்ஸிற்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு வைத்து எப்படி ஸ்நாக்ஸ் செய்வது என்று பார்க்கலாம்.
ஈவினிங் டைம்ல ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஏதாவது கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு இட்லி மாவு இருந்தால் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். இந்த உருளைக்கிழங்கு ஸ்நேக்ஸை உங்கள் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த ஸ்நாக்ஸ் செய்வது ரொம்பவே ஈசி. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் இட்லி மாவு, உருளை கிழங்கு வைத்து ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் முருங்கைக்கீரை வடை... ரெசிபி இதோ..!
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 1
இட்லி மாவு - 1 கப்
வர மிளகாய் - 3
பூண்டு - 4
சோம்பு - 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
அரிசி மாவு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: உங்க வீட்ல இட்லி மாவு இருக்குதா..? அப்போ ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு போண்டா செஞ்சு குட்டீஸ்களுக்கு கொடுங்க..
செய்முறை:
உருளைக்கிழங்கில் ஸ்னாக்ஸ் செய்ய முதலில், எடுத்து வைத்த உருளைக்கிழங்கை தோலை நீக்கி அதை நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் வரமிளகாயை போட்டு பத்து நிமிடம் ஊற வையுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 1 ஸ்பூன் உப்பு மற்றும் வெற்றி பெற்ற உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்க்கவும். பிறகு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கு முக்கால்வாசி வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி, உருளைக்கிழங்கை ஆற வையுங்கள்.
இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த வர மிளகாய், பூண்டு மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மசாலாவை இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதில், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கலக்கவும். மாவு கெட்டியாக இருந்தால் அதில் தேவையான அளவு அரிசி மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் குறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை தயாரித்து வைத்த மாவில் நன்கு முக்கி, பின்
எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D