Dhaniya Thuvaiyal : திருநெல்வேலி ஸ்பெஷல் மல்லி துவையல் செய்வது எப்படி? அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.
உடல் எடை, கொழுப்பு, பித்தத்தை குறைக்கவும், காய்ச்சல், உடல் சோர்வு, சளி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சுவையோடு சத்தான திருநெல்வேலி ஸ்பெஷல் மல்லி துவையல் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதை - ஒரு கைப்பிடி
வத்தல் - 4
பூண்டு - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - அரை ஸ்பூன்
புளி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்டைலில் கோழிக்குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க...!
செய்முறை:
அடுப்பில் கடையை வைத்து சூடானதும் அதில் எடுத்து வைத்த கொத்தமல்லி விதையை போட்டு வாசனை வரும் வரை நன்றாக வதக்கவும். கொத்தமல்லி விதை கருகிவிடக்கூடாது. பிறகு ஆற வைக்கவும். நன் கொத்தமல்லி விதை நன்றாக ஆரியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள் அதனுடன் புளி, வத்தல், தேங்காய் துருவல், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைக்கவும். பிறகு இதனுடன் பூண்டு, சீரகம், கறிவேப்பிலை போட்டு ஒரு முறை மட்டும் அரைக்கவும். நைசாக அரைக்க வேண்டாம். இப்போது அரைத்ததை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கொத்தமல்லி துவையல் ரெடி. இந்த துவையலை நீங்கள் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்பெஷல் தக்காளி பச்சடி.. ரெசிபி இதோ!
மல்லி துவையல் ஆரோக்கிய நன்மைகள்:
- கொத்தமல்லி விதையில் இருக்கும் வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது.
- ஜீரண சக்தியை தூண்டி உணவு நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. அதுபோல புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சனைகளையும் சரி செய்யும் மற்றும் அமில தன்மையை கட்டுப்படுத்தும்.
- மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். குடலில் இருக்கும் நச்சு மற்றும் கழிவுகளை வெளியேற்றி விடும். முக்கியமாக மூல நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
- கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி பலப்படுத்தும். கண் சூட்டை குறைக்கும் மற்றும் கண் பார்வையை அதிகரிக்க உதவும்.
- நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்தும்.
- வறட்டு இருமல், தொண்டை கட்டு, வாய் துர்நாற்றம், பல் வீக்கம், ஈறுவீக்கம் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும்.
- பித்தத்தால் ஏற்படும் தலை சுற்றல், மயக்கம் ஆகியவற்றை நீக்கும்.
- சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
- இரவில் தூக்கமின்மை பிரச்சனையை நீக்கி மன அமைதியை கொடுக்கும். நீங்கள் இரவு நன்றாக தூங்க முடியும்.
- ரத்த அழுத்தம் மற்றும் சோடியம் அளவை குறைக்கும்.
- உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும்.
