Asianet News TamilAsianet News Tamil

Chicken Recipe: ருசியான காரசாரமான ஆந்திரா சிக்கன் ஃபிரை செய்வது எப்படி?

ஆந்திராவில் மிகவும்  பிரபலமானது கோழி ஃபிரை. என்னதான் நாம் கோழிக்கறி செய்தாலும், ஆந்திரா மக்கள் செய்யும் விதமே தனிதான். காரசாரமாக செய்வார்கள். அசைவம் எப்போதும் கொஞ்சம் காரமாக இருந்தால்தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் என்று பொதுவாக அனைவரும் கூறுவது உண்டு. ருசியும் இருக்கும். 

Chicken Recipe: How to prepare Andhra Chicken Fry?
Author
First Published Oct 4, 2023, 12:10 PM IST

இந்தக் கோழி ஃபிரையை சாம்பார் சாதம், ரசம், தயிருடன் வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஸ்நாக் ஆகவும் கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள். 

கோழி ஃபிரை செய்வதற்கு எலும்பு இல்லாத கறியை எடுத்துக் கொள்ளலாம். எழும்பும் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு எலும்பு இருந்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள்.  

லேசான சூடில் கீழே இருக்கும் பொருட்களை வறுத்துக் கொள்ளவும்:
2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதை 
2 இஞ்ச் அளவிற்கு பட்டை 
6 கிராம்பு 
4  ஏலக்காய் 
1/2  ஸ்பூன் சீரகம் 
1/2 ஸ்பூன் பெருஞ்சீரகம் 

என்ன பன்னீர் தொடர்ந்து சாப்பிட்டால் வயதாகுமா? உண்மையை தெரிஞ்சிகலாம் வாங்க..!!

கீழே கொடுத்தும் பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்:
1/2   - எலும்பு இல்லாத அல்லது எலும்பு இருக்கும் சிக்கன் 
1 1/2 - டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு  
1/4 -  மஞ்சள் தூள் 
1 -  டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் 
1 1/2 - டேபிள்ஸ்பூன் கரம்மசாலா தூள் 
1 -பெரிய வெங்காயம், சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்  
1 - டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் 
1 - டேபிள்ஸ்பூன் நெய் 
1/2 - டேபிள்ஸ்பூன் உப்பு 

இத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் நீர் ஊற்றவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். தற்போது பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து லேசான தீயில் வேக வைக்கவும். சிக்கன் முழுவதும் வேகும் வரை வேக வைக்கவும். வெந்த பின்னரும் பாத்திரத்தில் தண்ணீர் இருந்தால்,  தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும். 

பார்ப்பதற்கு "இந்த" விதை சின்னதாக இருக்கும்.. ஆனால் பல அற்புதங்களை செய்யும்.. அது என்ன தெரியுமா?

இத்துடன், தனியாக 12 முந்திரி எடுத்து பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும். 

தற்போது ஃபிரை செய்யும் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். இதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிய பின்னர் சிக்கனை இதில் போடவும். தண்ணீர் வற்றிய பின்னர் முந்திரி பவுடர் தூவி, அரை டீஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். கரம் மசாலா சேர்க்கவும். வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும். ருசியான ஃபிரை சிக்கன் தயார்.

Follow Us:
Download App:
  • android
  • ios