பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாதாம் பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Benefits of eating soaked almonds

இயற்கையின் வரபிரசாதங்களில் ஒன்றுதான் பருப்புவகைகள். பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா உள்ளிட்டவைகள் உடலுக்கு அதீத நன்மைகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. பலருக்கும் பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவது நல்லதா அல்லது ஊறவைத்து சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி உள்ளது. இந்த தொகுப்பில் பாதாம் பருப்பை எப்படி தினமும் எடுத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி காணலாம்.

பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற பலரின் கருத்து உண்மை தான். ஊறவைத்த பாதாம் பருப்பு எளிதில் செரிமானம் ஆகும். ஊறவைத்த பாதாம் பருப்பில், ஆன்டிஆக்ஸிடண்ட்டின்கள் ஏராளம் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சருமத்தில் ஒரு என்சைம் தடுப்பான் இருப்பதால், அது உறிஞ்சுதல் மற்றும் செரிமான செயல்முறையை பாதிக்கும். இந்த ஊறவைத்த பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் மாங்கனீசு ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. அவற்றின் சில முக்கிய நன்மைகள் இங்கே பார்க்கலாம்:

மாங்கனீசு உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதாம் அருமருந்தாக செயல்படுகிறது.

புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால், பாதாம் பருப்பு நமது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கின்றன.

பாதாம் பருப்பில் மெக்னீசியம் மிகுந்து காணப்படுகிறது. மெக்னீசியம் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டை பராமரிக்க முக்கியமான மூலப்பொருளாகும். பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

எடை இழப்புக்கு உகந்த ஊறவைத்த பாதாம்

உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக இருக்க விரும்புபவர்கள் சிறந்த தேர்வாக ஊறவைத்த பாதாம் பருப்பு உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களின் சிறந்த சிற்றுண்டி தேர்வாக ஊறவைத்த பாதாம் பருப்பு உள்ளது. ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவதால் பசிதன்மையை கட்டுப்படுத்துகிறது. 

ஊறவைத்த பாதாமின் நன்மைகள்

பாதாமில் உள்ள வைட்டமின் பி17 புற்றுநோய் செல்களைக் கொல்ல உதவுகிறது

பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது.

பாதாமில் உள்ள வைட்டமின் பி17 புற்றுநோய் செல்களைக் கொல்ல உதவுகிறது.

முடி உதிர்தல், வறண்ட கூந்தல் மற்றும்  முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு பாதாம் பருப்பை உட்கொள்வது சிறந்த தீர்வாக உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios