எள்ளோட வெல்லம் சேர்த்து சாப்பிட்டால்.. எத்தனை நோய்களை விரட்டும் தெரியுமா?
எள்ளுடன் வெல்லம் சேர்த்து உண்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
வெல்லத்தில் பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதே மாதிரியே எள்ளும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஆகவே தான் நம்முடைய முன்னோர் எள், வெல்லம் ஆகியவற்றை கொண்டு தின்பண்டங்கள் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதில் எள்ளுக்கும், வெல்லத்திற்கும் அதிக பங்குள்ளது. வெல்லம், எள் இந்த இரண்டு பொருள்களும் நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கும். இதன் காரணமாக பலரும் இதை தவிர்ப்பார்கள். ஆனால் வறுத்த எள், வெல்லம் ஒன்றாக உண்பதால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும்.
இதய பராமரிப்பு
எள், வெல்லம் இரண்டும் ஒன்றாக சேர்த்த கலவையில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறையவே உள்ளன. தினமும் கொஞ்சம் இந்த கலவையை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு ஏற்படும் இதய நோய்கள் அபாயத்தை குறைக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடக்கூடாது. ஆனால் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால், குறைந்த அளவில் உண்ணலாம். ஒரு நாளுக்கு அரை ஸ்பூனுக்கும் குறைவாக வெல்லம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். ரொம்ப உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிமாகும்.
இரும்புச்சத்து குறைபாடு
ரத்தசோகை உள்ளவர்கள், உடலில் இரும்பு சத்து குறைவாக இருப்பவர்கள் வறுத்த எள்ளை, கொஞ்சம் வெல்லம் சேர்த்து உண்ணலாம். நாள்தோறும் ஒரு ஸ்பூன் எள்ளும், வெல்லமும் கலந்து உண்டால் உடலில் உள்ள இரும்பு சத்து குறைபாடு சரியாகும். இரும்புச்சத்து குறைபாடு என்பது அதிகளவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தான் ஏற்படுகிறது. அவர்கள் கட்டாயம் இதை உண்ண வேண்டும்.
உடல் எடை குறையும்!
தினமும் 1 ஸ்பூன் எள், வெல்லம் கலந்து உண்பதால் உடல் எடையை குறைக்கலாம். ஏனென்றால் இப்படி உண்ணும் போது உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் அதிக கலோரிகள் இருக்கும் உணவுகளை நீங்கள் உண்பதை தவிர்க்கலாம்.
கெட்ட கொழுப்பு
எள், வெல்லம் சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் விரைவில் குறையும். கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் எள், வெல்லம் ஆகியவை உண்ணலாம். இது இயற்கையான முறையில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் உங்களுக்கு உதவும்.
இதையும் படிங்க: அதிர்ஷ்டத்தை மாற்ற சிவப்பு மிளகாய்!! எப்படி?
எவ்வளவு உண்ண வேண்டும்?
- நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் அரை ஸ்பூனுக்கு மேல் சாப்பிடாதீர்கள். கவனம்!
- குழந்தைகள் என்றால் ஒரு ஸ்பூன் முதல் 2 ஸ்பூன் வரையில் எள் + வெல்லம் சேர்த்த கலவை யை உண்ணலாம். எள் லட்டாக இருப்பின் அதில் அரை லட்டு உண்ணலாம்.
எள் லட்டு
சில குழந்தைகளுக்கு எள் சாப்பிடுவது பிடிக்காது. அவர்களுக்கு எள்ளை பொடித்து அதனுடன் வெல்லம், நெய், ஏலக்காய் கலந்து லட்டுகளாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர்.
இதையும் படிங்க: விடாப்பிடியான எண்ணெய் கறை உள்ள பாத்திரங்கள் பளபளக்க டிப்ஸ்!