life-style

எண்ணெய் கறை

விடாப்பிடியான எண்ணெய் கறை படிந்த சமையல் பாத்திரங்களை கூட நொடியில் பளிச்சிட வைக்க பயனுள்ள குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். 

Image credits: Getty

உப்பு

எண்ணெய் கறை பாத்திரங்களில் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஊறவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து கழுவுங்கள். அனைத்து எண்ணெய் பிசுக்கும் நீங்கும்.  

Image credits: Getty

அரிசி தண்ணீர்

அரிசி வடித்த நீரில் எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரங்களை 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் கழுவினால் எண்ணெய் கறை நீங்கும். 

Image credits: Getty

ஆயில்

எண்ணெய் கறை நீங்க வெஜிடபிள் ஆயில், எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை கலந்து பாத்திரங்கள் மீது பூசுங்கள். சிறிது நேரம் கழித்து ஸ்க்ரப் செய்து வெந்நீரில் கழுவினால் போதும். 

Image credits: Getty

எலுமிச்சை சாறு

பேக்கிங் சோடாவுடன், எலுமிச்சை சாறு கலந்தால், அது எண்ணெய் பிசுக்கை நீக்குவது மட்டுமல்லாமல் கிருமிகளையும் நீக்கி விடும். 

Image credits: Getty

மரச்சாம்பல்

மர சாம்பலை பாத்திரங்களின் மீது தெளித்து, ஸ்கிரப் வைத்து நன்கு தேய்க்கவும். இதை வெந்நீரில் கழுவ பாத்திரம் பளிச்சென மின்னும். 

Image credits: Getty

தேங்காய் நார்

வினிகர், பேக்கிங் சோடா, சலவை சோப்பு ஆகியவை கலந்து அதை தேங்காய் நாரில் தொட்டு, பாத்திரங்களை தேய்த்து கொள்ளுங்கள். வெந்நீரில் கழுவினால் போதும். 

Image credits: Getty

எண்ணெய் பிசுக்கு

இனி சமையல் பாத்திரங்களை கழுவும்போது எலுமிச்சை, வினிகர், உப்பு போன்ற பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

Image credits: Getty

பூச்சிகள் வீட்டிற்கு வராமல் தடுக்கும் செடிகள்!

உங்கள் சருமத்தை மோசமாக்கும் உணவுகள்..!!

கோடையில் குடும்பத்தோடு விசிட் அடிக்க! குளுகுளு சுற்றுலா தலங்கள் லிஸ்ட்

எடை இழப்புக்கு சிறந்த ஆதாரம் 'கிரீன் டீ'