life-style
இந்தியாவில் குறிப்பாக மே மாதத்தில் பார்க்க வேண்டிய சில இடங்களின் விவரங்களை இங்கு காணலாம்.
ஹிமாச்சலப் பிரதேசம் இமயமலை அடிவாரப் பகுதியான ஸ்பிட்டி மாவட்டம், மே மாதத்தில் நம் கண்களுக்கு விருந்தாக அமையும்.
வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது தவாங். இங்கு மலையேற்றம், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள் பல அமைந்துள்ளன.
மேகாலயாவின் தலைநகரம் ஷில்லாங். இங்கு பிரபலமான எலிபண்ட் ஃபால்ஸ் முதல் டேவிட் ஸ்காட் வரை ஏராளமான இடங்களை கண்டு ரசிக்கலாம்.
சந்தக்பூர் என்ற இடம் இந்தியா-நேபாள எல்லையில் உள்ள சிங்காலிலா மலைத்தொடரின் ஒரு மலை உச்சியில் உள்ளது. இங்கு சில ஹோட்டல்களுடன் ஒரு சிறிய கிராமம் உள்ளது.
கேரளாவின் இடுக்கியில் உள்ள மூணாறு கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் உள்ளது. தேயிலைத் தோட்டங்கள், மலைகள், குளிர்ந்த காலநிலை என மே மாதத்தில் சிறந்த அனுபவமாக இருக்கும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கௌசனி மலைவாசஸ்தலம் ஆகும். திரிசூல், நந்தா தேவி, பஞ்சுலி போன்ற இமயமலை சிகரங்களின் 300 கிமீ அகலமான பரந்த காட்சிக்கு பிரபலமானது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஊட்டி, மே மாதம் விசிட் அடிக்க ஏற்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலம். தொட்டபெட்டா, அவலாஞ்சி உள்ளிட்ட பார்க்க வேண்டிய ஏராளமான இடங்கள் அங்கு உள்ளன.
டார்ஜிலிங் கஞ்சன்ஜங்கா மலைத்தொடர், தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டது. காடுகளின் வழியே செல்லும் டார்ஜிலிங் ரயில் பயணம் அலாதியான அனுபவம்.