Fashion
இளவரசி டயானாவை யாரால் மறக்க முடியும். அழகு, பேச்சு, உடை என அவருடைய ஒவ்வொரு அம்சமும் மக்களை கவர்ந்தது.
இளவரசி டயானா தனது 36 வயதில் ஒரு கார் விபத்தில் இறந்தார். இன்றும் அவரது மரணத்தின் மீது பல கேள்விகள் உள்ளன. தற்போது அவரது நகைகள் ஏலம்.
இளவரசி டயானாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நெக்லஸ் ஏலம் விடப்படுகிறது. அவரது ஸ்வான் லேக் நெக்லஸ் உலகின் விலையுயர்ந்த நகைகளில் ஒன்று.
ஏலம் விடப்படவுள்ள நெக்லஸை இளவரசி டயானா 1997இல் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் அணிந்திருந்தார்.
பிரிட்டிஷ் ஊடகங்களின்படி, இந்த நெக்லஸ் 178 வைரங்கள், ஐந்து முத்துக்களால் ஆனது. அன்றைய கிரவுன் ஜூவல்லர் கரார்ட் இந்த நெக்லஸைத் தயாரித்தது.
டயானாவின் நெக்லஸ் 10 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ. 1,03,33,40,118 ஆகும்.
டயானாவின் கழுத்தை அலங்கரித்த இந்த நெக்லஸ் வரும் ஜூன் 27ம் தேதி ஏலத்திற்கு வரும். இப்படி இளவரசி டயானாவின் நகைகளை தனியாரிடம் விற்பது இதுவே முதல் முறை.
டயானாவின் நெக்லஸை அமெரிக்க தொழிலதிபர் ஜிம் மெக்கிங்வால் 1999 ஆம் ஆண்டு வெறும் 1 மில்லியனுக்கு வாங்கினார். பொருளாதார வீழ்ச்சியின் போது 2008இல் உக்ரேனிய குடும்பத்திற்கு விற்றார்.
டயானாவின் நெக்லஸ் 2008ஆம் ஆண்டு முதல் உக்ரைன் குடும்பத்திற்கு சொந்தமானது. தற்போது உக்ரைனின் புனரமைப்புக்காக இந்த நெக்லஸை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.