Fashion

இஷா அம்பானி

மெட் காலா பேஷன் ஷோவில் இஷா அம்பானி பயன்படுத்திய டால் பேக்கின் விலை பல லட்சங்கள் என சொல்லப்படுகிறது. இது சேனல் லிமிடெட் எடிசன் வகையை சேர்ந்தது. 

மெட் காலா பேஷன் ஷோ

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மெட் காலா பேஷன் ஷோ விமரிசையாக நடைபெற்றது. 

அமெரிக்கா டூ கேரளா

மெட் காலா பேஷன் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட கார்பெட் கேரளாவில் தயாரிக்கப்பட்டது.

பிரபலங்கள் பங்கேற்பு

மெட் காலா பேஷன் நிகழ்ச்சியில் உலகில் எல்லா மூலைகளிலும் இருந்து ஆடை வடிவமைப்பாளர்கள், மாடல்கள், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

இந்திய பிரபலங்கள்

இந்திய நடிகைகள் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, இஷா அம்பானி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். 

இஷா அம்பானி

உலக கோடீஸ்வரர்களில் முக்கியமானவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவர் கருப்பு நிற உடையில், ஜொலிக்கும் தேவதையாக பேஷன் நிகழ்வில் பங்கேற்றார். 

டால் பேக்

இஷா அம்பானி பொம்மையை போல தன் கையில் வைத்திருந்த 'டால் பேக்' விலை $30,550 என சொல்லப்படுகிறது. அதன் இந்திய மதிப்பு ரூ.24,97,951.30 (24 லட்சம்) ஆகும். 

கருப்பு உடை

இஷா அம்பானியின் கருப்பு நிற உடை மெட் காலா நிகழ்ச்சியில் கச்சிதமாக பொருந்தி போனது. அவருடைய கையில் இருந்த 'டால் பேக்' கவனம் ஈர்த்தது. 

இஷாவின் ஆபரணங்கள்

இஷா, லோரெய்ன் ஸ்வார்ட்ஸ் நகைகளுடன், வைர நெக்லஸ் அணிந்திருந்தார். அவரது கைகளை ஒரு வைரம் மற்றும் மரகத மோதிரமும், மெல்லிய வளையலும் அலங்கரித்தன. 

இஷாவின் ஆடை

கருப்பு வண்ண ஆடையாக இருந்தாலும் அதில் ஜோராக மினுங்கும் இஷா அம்பானியின் ஸ்டைலிஷ் லுக்கிற்கு, வடிவமைப்பாளர் பிரியங்கா கபாடியா தான் காரணம்.