life-style
உங்களுடைய வீட்டில் நொச்சி செடியை வளருங்கள். நொச்சி இலைகளின் மணம் வீசினால் கொசுக்கள் வராது.
உங்களுடைய செடிகளுக்கு மத்தியில் பூண்டை வளர்ப்பது பூச்சிகளை விரட்ட நல்ல தந்திரமாகும்.
வீட்டில் சாமந்தி பூக்களை வளர்த்தால் எறும்புகள் அதிகம் ஊடுறுவாது. எறும்புகளின் கடியில் இருந்து தப்பலாம்.
மனிதர்களுக்கு பிடித்த லாவண்டர் வாசனை எறும்புகள், ஈக்கள், அந்துப்பூச்சிகள் போன்றவைகளுக்கு பிடிக்காது. லாவண்டர் செடியை வளர்த்தால் பூச்சிகளை விரட்டலாம்.
வீட்டு வாசலுக்கு அருகே அல்லது ஜன்னலுக்கு பக்கமாக ஒரு பெரிய ரோஸ்மேரி செடியை வளருங்கள். இது வீட்டிற்குள் பூச்சிகள் நுழைவதைத் தடுக்க உதவும்.
புதினா செடியை வளர்ப்பதால் எறும்புகளைத் தடுக்கலாம். சிலந்திகள் நம் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்கவும் புதினா உதவும். புதினா சாறு கரப்பான் பூச்சிகளை விரட்டும்.
எறும்புகள், அந்துப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் ஆகிய பூச்சிகளை தைம் என்ற மூலிகை செடி தடுக்கிறது.
வீட்டை தேவையில்லாத குப்பைகள் இல்லாமல் பேணி பாதுகாத்தாலே பூச்சிகளை தடுக்க முடியும்.
பூச்சிகளை தான் பல்லிகள் உண்கின்றன. உங்களுடைய வீட்டில் பூச்சிகளை ஒழித்து கட்டினால் பல்லிகளும் வெளியேறிவிடும்.
உங்கள் சருமத்தை மோசமாக்கும் உணவுகள்..!!
கோடையில் குடும்பத்தோடு விசிட் அடிக்க! குளுகுளு சுற்றுலா தலங்கள் லிஸ்ட்
எடை இழப்புக்கு சிறந்த ஆதாரம் 'கிரீன் டீ'
இளவரசி டயானா நெக்லஸ் ஏலம்! அதனுடைய விலையை அறிந்தால் ஷாக் தான்!!