Asianet News TamilAsianet News Tamil

கோடைகாலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?...அப்போ உடனே இதை படியுங்கள்..!

பேரிச்சம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிகளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இப்பழத்தில் உள்ளது. இருப்பினும் கோடை காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா என்று கேள்வி எழுகிறது.இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசிக்கலாம் வாங்க...

benefits of eating dates in tamil
Author
First Published Apr 20, 2023, 8:05 PM IST | Last Updated Apr 20, 2023, 8:05 PM IST

குளிர்காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவதினால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் கோடை காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். எனவே கோடை காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு முன்னர் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை காணலாம்.

benefits of eating dates in tamil

பேரீச்சம் பழத்தில் இயற்கையாகவே அதிக சர்க்கரை உள்ளது. எனவே கோடை காலத்தில் இப்பழத்தினை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தக்கூடும். எனவே இது நீரிழிவு நோய்கள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இயற்கையாகவே பேரீச்சம் பழம் சூடான தன்மையைக் கொண்டுள்ளது. எனவே இதை கோடை காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்த கூடும்.

இதையும் படிங்க:அஸ்வகந்தா மருத்துவ பயன்கள் ஏராளம்.. ஆனா அதிகமா சேர்த்தால்.. இந்த பக்க விளைவுகள் இருக்கு!

பேரிச்சம்பழம் சாப்பிட்டால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் இரத்த சோகை நோயாளிகளுக்கு இப்பழம் சிறந்த மருந்தாகும். எனவே இப்பழத்தினை குறைந்த அளவு எடுத்துக் கொண்டால் எவ்வித பாதிப்பும் வராது.benefits of eating dates in tamil

கோடை காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், சாப்பிடுவதற்கு முன் அவற்றை தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவற்றின் உஷ்ணத்தை குறைக்கும். கோடையில் தினமும் இரண்டு முதல் மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டலாம். மேலும் இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்  செரிமானத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

எனவே கோடை காலத்தில் முறையான முறையில் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் எவ்வித பாதிப்பும் வராது என்று அறிந்து கொண்டோம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios