Asianet News TamilAsianet News Tamil

எக்கச்சக்க நன்மைகள் தரும் "சப்பாத்தி கள்ளிப்பழம்".. அதுவும் இது குழந்தை இல்லாதவர்களுக்கு வர பிரசாதமாம்!

முட்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் பொதிந்துள்ளது. அது எப்படி என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து படியுங்கள்...

awesome health benefits of chapati kalli fruit in tamil mks
Author
First Published Nov 16, 2023, 11:52 AM IST | Last Updated Nov 16, 2023, 12:02 PM IST

சப்பாத்திக்கள்ளிப்பழம் கரடு முரடு முட்களுடன் காணப்படும். இப்படி முட்களுடன் காணப்படும் இந்த சப்பாத்திக்கள்ளிப்பழத்தில், வைட்டமின் C, B, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், தாவர ஊட்டச்சத்துகள், கால்சியம், மெக்னீசியம் , பீட்டா கரோட்டின் ஏன ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இது வறண்ட நில தாவரத்தில் மட்டுமே கிடைக்கும். நாவறட்சியை போக்க ஆடு மேய்ப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் இது அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அதுமட்டுமின்றி, இன்றுவரை பழங்குடியினர் இந்த சப்பாத்திக்கள்ளியை சிறந்த உணவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பழத்தை இந்தியாவில் கிவி  என்று அழைப்பர். இந்த சப்பாத்திக்கள்ளிப்பழமானது பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். சுவைப்பதற்கு தித்திப்பாகவும் இருக்கும். அதுபோல் இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அவை ரத்த அழுத்தம் அதிகரிக்கச் செய்யாமல், சீராக வைக்க உதவுகிறது.

உடல் எடை குறைக்கும்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த சப்பாத்திக்கள்ளிப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில், இதில் மிகக்குறைந்த அளவில் தான் கலோரிகள் உள்ளன. மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி,  மலச்சிக்கல் தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் பெருங்குடலை சுற்றியுள்ள நச்சுக்களையும் சுலபமாக  வெளியேறுகிறது.

இதையும் படிங்க:  சப்பாத்திக்கள்ளி பழத்தில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ நன்மைகள்!

பெண்களுக்கு நல்லது: சப்பாத்தி கள்ளிப்பழம் பெண்களுக்கு அருமருந்தாகும். காரணம், மாதவிடாய் சமயத்தில், ஏற்படும் அடிவயிற்று வலியை தடுக்க இது பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இன்றைய காலத்தில் பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் இதனால் கருச்சிதைவும் உண்டாகிறது. அந்தவகையில், இந்த நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு சப்பாத்தி கள்ளிப்பழம் பெரிதும் உதவுகிறது. எனவே இந்த பழத்தை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால், கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் விரைவில் அழிந்து விடும் என்று கூறுகின்றனர்.

மேலும் திருமணமான பெண்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும் மற்றும் கரு முட்டை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். குறிப்பாக பெண்கள் கர்ப்ப காலத்தில், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு குழந்தை சிவப்பமாக பிறக்கும் என்று சொல்லப்படுகின்றன. அதுவும் குறிப்பாக, குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளிப்பழம் தான் சிறந்தது என்று சொல்லலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆண்களுக்கும் நல்லது: இந்த சப்பாத்திக்கள்ளிப்பழமானது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஏராளமான நன்மைகளை தரும். எப்படியெனில் அவர்களின் விந்து உயிரணுக்கள் ஆரோக்கியற்றத்காக இருந்தால், இந்த பழம் அவர்களுக்கு உதவும். முக்கியமாக, இந்த பழத்தை குழந்தை பேறுக்காக சாப்பிடுபவர்கள், டீ, காபி குடிக்க கூடாது. இருந்தபோதிலும், நீங்கள் இந்த பழத்தை சாப்பிடுவதற்கு முன் ஒருமுறை மருத்துவர்களிடம் கட்டாயம் ஆலோசனை பெறுவது நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios