சப்பாத்திக்கள்ளி பழத்தில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ நன்மைகள்!
benefits of chapati kalli fruit : சப்பாத்திக்கள்ளி பழத்தில் பொதிந்துள்ள பல ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
சப்பாத்திக்கள்ளிப்பழம் வறண்ட நில தாவரத்தில் இருந்து கிடைக்கக் கூடியது. இதனை நாவறட்சியை போக்க ஆடு மேய்ப்பவர்கள் எடுத்து உண்பது வழக்கம். வெயின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் சக்தி உடையது. ஆனால் இதைத் தவிரவும் இவற்றில் பல நன்மைகள் உள்ளன. அதை இங்கு காணலாம்.
தொடர்ந்து அவதிக்குள்ளாக்கும் காச இருமலை தடுக்க இந்த பழம் உதவுகிறது. கக்குவான் இருமலுக்கும் ஏற்றது. பருவகாலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது. கண்பார்வையை மேம்படுத்தும்.
நினைவாற்றலை அதிகமாக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். சர்க்கரை வியாதி உள்ளவர்களும் உண்ணலாம். வீக்கம் உள்ள இடங்களில் பூசி கொண்டால், எப்படிப்பட்ட உடலின் வீக்கமும் குறையும்.
சப்பாத்திக்கள்ளி பழத்தில் பொட்டாசியம் மிகுந்து காணப்படும். இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகாமல் சீராக இருக்கும். அதுமட்டுமில்லாமல், நமது இரத்த நாளங்களில் சேரும் கழிவுகளை அகற்றி இதய நோய்களை தடுக்கிறது.
இந்தப் பழத்தை உண்ணும் முன்பு தோலை நீக்க வேண்டும். இல்லையெனில் உதடுகள், ஈறுகள், தொண்டையில் அதனுடைய முட்கள் சிக்கிவிடும். கவனமாக உண்ணுங்கள்.
இதையும் படிங்க: மிளகாய் பொடியில் கலப்படம் இருக்குதா? கேன்சர் வரவைக்கும் போலிகளை ஈஸியா கண்டுப்படிப்பது எப்படி? டிப்ஸ் இதோ
இதையும் படிங்க: திடீர்னு லோ சுகர் ஆச்சுன்னா என்ன செய்யணும்.. சாக்லேட் சாப்பிட்டால் நல்லதா?