திடீர்னு லோ சுகர் ஆச்சுன்னா என்ன செய்யணும்.. சாக்லேட் சாப்பிட்டால் நல்லதா?
நமக்கு ரத்தச் சர்க்கரை அளவு 45-க்கும் கீழ் இருந்தால் தான் மோசமான நிலை என்கிறார்கள் மருத்துவர்கள்.
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதும், குறைவதும் சில நேரங்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அப்போது தொடர் சிகிச்சை, உணவு பழக்கம் ஆகியற்றிற்கு பிரதான கவனம் கொடுக்க வேண்டும். திடீரென சர்க்கரை அளவு அதிகரிப்பது சிக்கலை ஏற்படுத்தினாலும், திடீரென சர்க்கரை அளவு மிகவும் குறைவது ஆபத்தை அதிகரிக்கும். அதனால் அடிக்கடி பரிசோதனை செய்து கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவு குறைவது (low sugar) அறிகுறிகள் என்னென்ன, எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
அறிகுறிகள்
1.கை, கால் நடுக்கம்
2.பயங்கர சோர்வு
3.வியர்த்து கொட்டுதல்
4.மயக்கம்
5.மரத்து போகும் உணர்வு
6.பதட்டம்
7.நீரிழப்பு
8.அடிக்கடி சிறுநீர் போதல்
9.கவனம் சிதறுவது ஆகியவை சர்க்கரை அளவு குறையும் போது ஏற்படும் அறிகுறிகள். மேலும், கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் சர்க்கரை அளவு அதிகரித்தால் கோமா, வலிப்பு மாதிரியான பெரிய பிரச்சனைகளுக்கு கூட ஆளாகலாம்.
சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது, புரதச்சத்து இருக்கும் உணவை குறைவான அளவு எடுத்து கொள்ளுதல், மாத்திரை அல்லது இன்சுலின் போட்டு பிறகு சரியான நேரத்தில் உண்ணாமல் இருத்தல், கடினமான வேலைகளை செய்தல் போன்றவை லோ சுகர் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் எப்போதும் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்களை கையில் வைத்திருப்பது நல்லது. திடீரென சக்கரை அளவு குறைந்தால் சாக்லேட்களை உண்பது, ஜூஸ் அருந்துவது, சர்க்கரை கலந்துள்ள பொருட்களை உண்பது நல்லது. அப்படி சாப்பிட்டால், உங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் குறைந்து இயல்பு நிலை வந்துவிடும்.
சர்க்கரை அளவு குறைந்துவிட்டது என அளவுக்கு மீறி இனிப்புகளை எடுத்து கொள்ளக் கூடாது. கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் உணவுகளை உண்பது தவறு. எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவை எடுத்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. ரத்த சர்க்கரை அளவு குறைதல், உயர்தல் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ரத்தச் சர்க்கரை அளவு 45-க்கும் கீழ் இருந்தால் தான் மோசமான நிலை என்கிறார்கள் மருத்துவர்கள். 45-க்கு மேலே இருக்கும்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதனை பின்பற்றினாலே இந்தப் பிரச்னையை தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பச்சை பப்பாளி.. கட்டாயம் வாரம் ஒருமுறை சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவது நல்லதா? கட்டுக்கதையும் உண்மையும்!