Chilled Desserts: பக்ரீத் விருந்தை ஸ்பெஷல் ஆக்க, ஜில்லுனு சில டெசர்ட்ஸ் செஞ்சா சூப்பரா இருக்கும். ஷாஹி ஃபிர்னி, மாம்பழ குல்ஃபி, ஃப்ரூட் கஸ்டர்ட், சாக்லேட் மூஸ், குலாப் ஃபாலூடா போன்ற ரெஃப்ரெஷிங் ஸ்வீட்ஸ் இந்த வெயில் காலத்துல வர்ற விருந்தாளிங்களுக்கு இனிப்பையும் குளிர்ச்சியையும் ஒண்ணா கொடுக்கும்.
Summer Dessert Recipes: பக்ரீத் பண்டிகைனாலே சுவையான சாப்பாடும், இனிப்பு வகைகளும் இல்லாம எப்படி? இந்த கோடை காலத்துல ஜில்லுனு டெசர்ட்ஸ் செஞ்சு கொடுத்தா, வர்ற விருந்தாளிங்க மனசு குளிர்ந்துடும். விருந்தும் களைகட்டும். இந்த தடவை நீங்க எதாச்சும் புதுசா, ரெஃப்ரெஷிங்கா செய்ய நினைச்சா, இந்த 5 Chilled Desserts உங்க ஈத் விருந்தை ஸ்பெஷல் ஆக்கிடும். இதையெல்லாம் செய்யுறது ரொம்ப ஈஸி, ஆனா டேஸ்ட் அபாரமா இருக்கும் எல்லாரும் பாராட்டாம இருக்கவே மாட்டாங்க.

ஷாஹி ஃபிர்னி
தேவையான பொருட்கள்: பால், அரிசி, சர்க்கரை, ஏலக்காய் தூள், பாதாம்-பிஸ்தா, குங்குமப்பூ.
செய்முறை: அரிசியை ஊற வச்சு அரைச்சுக்கோங்க. பாலைக் காய்ச்சி, அதுல அரிசி பேஸ்ட்டை சேர்த்து கெட்டியாகும் வரைக்கும் கிளறுங்க. அப்புறம் சர்க்கரை, ஏலக்காய், குங்குமப்பூ சேருங்க. நல்லா ஆறினதும், சின்ன சின்ன கிண்ணத்துல ஊத்தி, நட்ஸ் தூவி அலங்கரிங்க. ஃபிரிட்ஜ்ல வச்சு ஜில்லுனு பரிமாறுங்க.

மாம்பழ குல்ஃபி
தேவையான பொருட்கள்: மாம்பழக் கூழ், பால், கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய், நட்ஸ்.
செய்முறை: பாலை லேசா கெட்டியாகும் வரைக்கும் காய்ச்சுங்க. அதுல மாம்பழக் கூழ், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்குங்க. ஏலக்காய், நறுக்கின நட்ஸ் சேர்த்து, குல்ஃபி மோல்டுல ஊத்துங்க. 6-7 மணி நேரம் ஃபிரீசர்ல வச்சு எடுத்தா, ஜில்லுனு மாம்பழ குல்ஃபி ரெடி.
சாக்லேட் மூஸ்
தேவையான பொருட்கள்: டார்க் சாக்லேட், ஃப்ரெஷ் கிரீம், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ்.
செய்முறை: சாக்லேட்டை உருக்கி, அதுல விப் பண்ணுன கிரீமை சேருங்க. அப்புறம் சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நல்லா கலக்குங்க. இந்த கலவையை கிளாஸ்ல ஊத்தி 3-4 மணி நேரம் ஃபிரிட்ஜ்ல வைங்க. மேல சாக்லேட் சிப்ஸ் தூவி பரிமாறுங்க.

ஃப்ரூட் கஸ்டர்ட்
தேவையான பொருட்கள்: பால், கஸ்டர்ட் பவுடர், சர்க்கரை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம்.
செய்முறை: பால்ல கஸ்டர்ட் பவுடர், சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரைக்கும் காய்ச்சுங்க. ஆறினதுக்கு அப்புறம், நறுக்கி வச்ச பழங்களை அதுல சேருங்க. கொஞ்ச நேரம் ஃபிரிட்ஜ்ல வச்சா, டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும். ஜில்லுனு ஃப்ரூட் கஸ்டர்ட் கொடுத்தா விருந்தாளிங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
குலாப் ஷர்பத் ஃபாலூடா
தேவையான பொருட்கள்: குலாப் ஷர்பத், பால், சேமியா, சப்ஜா விதைகள், ஐஸ்கிரீம்.
செய்முறை: சேமியாவை வேக வச்சுக்கோங்க, சப்ஜா விதைகளை ஊற வைங்க. ஒரு கிளாஸ்ல குலாப் ஷர்பத், ஜில்லுனு பால், சேமியா, சப்ஜா விதைகளை ஒண்ணொண்ணா சேருங்க. மேல வெண்ணிலா ஐஸ்கிரீம் வச்சு, நட்ஸ் தூவி அலங்கரிங்க. இந்த ராயலான டெசர்ட், ஈத் பார்ட்டியில எல்லாரோட ஃபேவரைட்டா மாறிடும்.


