தன்னுடைய ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி பகிர்ந்துள்ள வீடியோ இதோ.. 

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டி. அது மட்டுமில்லாமல் தன் உடலை கச்சிதமாக பேணி வரக் கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது வருக்கு 47 வயது, இருந்தாலும் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இளமையாகவே வலம் வருகிறார். ஆனால் அந்த தோற்றம் எளிமையாகவும் கிடைத்துவிடவில்லை. அவருடைய பிட்னஸ் குறித்து தற்போது வீடியோ ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் யோகா முதல் ஜிம் வொர்க் அவுட் வரை பல நிலைகளில் அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வில் போல வளையும் உடல்வாகும், முழு ஆற்றலுடன் அவர் உடற்பயிற்சிகளை செய்வதும் காண்பவர்களை சற்று அசர வைக்கிறது. 

தன்னை போலவே மற்றவர்களும் உடலை பிட்டாக வைத்திருப்பதற்கு ஷில்பா ஷெட்டி வழிகாட்டவும் செய்கிறார். "ஒருவரின் அனைத்து கனவுகளையும் அடைய நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், முயற்சி ஆகியவை தான் நான்கு தூண்களாக இருக்கின்றன. ஆரோக்கியமான உடலை அடையும் கனவும் அதில் அடங்கும். இதற்காக உங்களுடைய அன்றாட பழக்கங்களை மாற்றியமைத்து, ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கு மாறுவது அவசியம். நீங்கள் கடின உழைப்பை தவறாமல் கொடுத்தால், இறுதியில் வித்தியாசத்தைக் காண்பீர்கள்"என ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோவுக்கு தலைப்பு (caption) கொடுத்திருந்தார். 

View post on Instagram

நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் ஆரோக்கியமான உடலமைப்பை பெறுவது ஒரு சாலையின் முடிவை எட்டுவது போல் எளிமை கிடையாது. உடலை பராமரிக்க நீங்கள் சீராகவும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டும் இருக்க வேண்டும். இதில் விரைவான முடிவுகள் கிடைக்காது, ஆனாலும் குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பலனளிப்பதாக இருக்கும் என்கிறார் ஷில்பா. 

நடிகை ஷில்பா ஷெட்டி மிஸ்டர் ரோமியோ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஷில்பா கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..