கரும்புள்ளிகளை எளிதாக நீக்கும் 4 சமையலறை பொருட்கள்..!!

சிலருக்கு முகப்பரு மறைந்தாலும், முகப்பருக்கள் மறைவதற்கு நேரம் எடுக்கும். பருக்களைக் கிள்ளினாலும் அல்லது உதிர்த்தாலும் கரும்புள்ளி அதிகரிக்கும்.
 

These four kitchen items can be used to get rid of dark spots on the face

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் பலருக்கும் தொந்தரவு செய்யும் பிரச்னையாக உள்ளது. சிலருக்கு முகப்பரு மறைந்தாலும், முகப்பருக்கள் மறைவதற்கு நேரம் எடுக்கும். இதை முறையாக பராமரிக்கவில்லை என்றால் கரும்புள்ளியாக மாறி முகத்தில் நிரந்தரமாக தங்கிவிடும். இந்த கரும்புள்ளிகளைப் போக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில ஃபேஸ் பேக்குகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தயிர் மற்றும் அரிசி மாவு

இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

கடலை மாவு மற்றும் தேன்

ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக்கொள்ளவும். அதை பேஸ்டு போல நன்றாக கலக்கி எடுத்திடவும். பின்னர் இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து கழுவவும். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவாக போய்விடும்.

பிளாஸ்டிக் சாமானம் முதல் பிஞ்சுபோன செருப்பு வரை- பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்..!!

காபி தூள் மற்றும் மஞ்சள்

ஒரு டீஸ்பூன் காபி தூளில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கவும். பின்னர் இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். அரைமணிநேரம் வைத்திருந்து கழுவவும். கழுவும் போது குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மெல்லிய உணர்திறன் கொண்ட சோப்புப் போட்டு கலவையை அகற்ற வேண்டும்.

தக்காளிச் சாறு & வெல்லம்

ஒரு டீஸ்பூன் பொடித்த வெல்லம், ஒரு டீஸ்பூன் தக்காளி சாறு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக கலக்கி முகத்தில் தடவ வேண்டும். ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். இதை வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் செய்யலாம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios