Hair Care: தலைமுடியைப் பராமரிக்க நாம் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் இவை தான்!
தலைமுடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தலைமுடியை சரியான முறையில் பராமரித்து வந்தாலே போதும், தலைமுடி உதிர்வைத் தடுக்க முடியும். அவ்வகையில், தலைக்கு குளிக்கும் போது நாம் தவறியும் செய்யக் கூடாத 5 செயல்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என இருபாலரும் தலைமுடியை பராமரிப்பதில் மிகவும் கடுமையான சிரமத்தை மேற்கொள்கின்றனர். தவறான உணவுமுறை, சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம் மற்றும் சரியான பராமரிப்பின்மை உள்பட பல காரணங்களினால், முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால், பல இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனையெல்லாம் தடுக்க முதலில் தலைமுடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தலைமுடியை சரியான முறையில் பராமரித்து வந்தாலே போதும், தலைமுடி உதிர்வைத் தடுக்க முடியும். அவ்வகையில், தலைக்கு குளிக்கும் போது நாம் தவறியும் செய்யக் கூடாத 5 செயல்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
தலைக்கு குளிக்கும் போது என்ன செய்ய வேண்டும்?
தற்போது கடைகளில் விற்கும் ஷாம்பு மற்றும் சிகைக்காயில் இரசாயனங்கள் அதிகளவில் உள்ளது. ஆகையால், தலைக்கு குளிக்கும் போது இரசாயனம் குறைந்த ஷாம்புவை தேர்ந்தெடுத்து, அதனை பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, ஷாம்புவை அப்படியே முடி மற்றும் தலையில் போடாமல், தண்ணீரில் கலந்து கொண்ட பிறகே, தலையில் தேய்க்க வேண்டும்.
- தலைக்கு குளிக்கும் நேரத்தில், தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், தலையில் அதிக வறட்சி இல்லாமல் இருக்கும்.
- தலைமுடியைப் பாதுகாக்க முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மருதாணி என இயற்கையான ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
- தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு, கட்டாயம் கண்டிஷ்னர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷ்னரை தலைக்குள் படாதவாறு தேய்க்க வேண்டியதும் அவசியம்.
Saffron Tea: தினந்தோறும் குங்குமப்பூ டீ குடித்தால் உடல் எடை குறையுமா?
செய்யக் கூடாதவை
- தலைக்கு குளித்து முடித்தவுடன், தலைமுடிகள் காயும் முன்பாக தலையில் சீப்பு போட்டு தலைசீவுவதை தவிர்க்க தவிர்க்க வேண்டும்.
- தலைக்கு குளித்தவுடன், மெல்லிய டவள் கொண்டு, தலைமுடியை மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும். தலையில் அழுத்தி துடைக்க வேண்டாம்.
- நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் தலைமுடி உதிரும் பிரச்சினை ஏற்படும். ஆதலால் இந்த காலங்களில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சீரம் பயன்படுத்தி, தலைமுடியின் வறட்சியினை தவிர்க்கலாம்.
மேற்கண்ட வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால், தலைமுடி உதிர்வுப் பிரச்சனை வெகு விரைவில் சரியாகி விடும். அதோடு, அடிக்கடி தலைக்கு எண்ணெய் வைப்பதும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.