Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் அடிக்கடி பியூட்டி பார்லர் செல்பவரா..?? அப்போ உங்களுக்கு இந்த பிரச்னை வரலாம்..!!

அழகு நிலையத்தில் ஹார்வாஷ் செய்யும் போது சுயநினைவிழந்து மயங்கிய பெண்ணுக்கு ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’ என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

symptoms of Beauty Parlour Stroke Syndrome know the reasons
Author
First Published Nov 1, 2022, 10:32 PM IST

ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் அழகு நிலையத்துக்கு முடி வெட்டச் சென்றுள்ளார். அப்போது முடியை ஹார்வாஷ் செய்தபோது, அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் மருத்துவர், அந்த பெண் ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’ என்கிற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் கவனமீர்த்துள்ளது. இந்நிலையில்  ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’ என்றால் என்ன? எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? இதனால் வரக்கூடிய விளைவுகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’ என்றால் என்ன? 

மனிதனாக பிறப்பவர்களில் 10 முதல் 20 விழுக்காட்டினருக்கு தமனியின் ஒரு பக்கம் மெல்லியதாக இருக்கும். இந்நிலை கொண்டவர்களுக்கு மற்றொரு தடிமனான பக்கத்தின் தமனி வளைந்திருக்கும்போது அல்லது கழுத்துப் பகுதியில் ஹைப்பர்டென்ஷன் ஏற்படும் போது, மெல்லிய தமனி அழுத்தத்திற்குள்ளாகும். இதனால் சிலருக்கு ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும். ஹைதராபாத்தில் நடந்த இக்குறிப்பிட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் இடதுப் பக்க தமனி மெல்லியதாக இருந்துள்ளது. அப்போது அவருக்கு ஹார்வாஷ் கொடுக்கப்பட்ட போது, ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளது.

ஸ்ட்ரோக்கை முன்னரே உணர்வது எப்படி?

ஒருவருக்கு ஸ்ட்ரோக் ஏற்படவுள்ளது என்றால், அவருக்கு அடிக்கடி தலைச்சுற்றல், குமட்டல், மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் வரும். ஒருவர் கழுத்தையும் தலையையும் ஒரே இழுப்பால் கடுமையாகத் திருப்ப முனையும் போது ஜர்க் தோன்றும். இத்தகைய இயக்கம் மென்மையான தசைகள் காயமடைய வழிவகுக்கும், மேலும் மூளைக்கு இரத்த விநியோகம் தடைபடுகிறது. இதன் விளைவாக பக்கவாதம் ஏற்படும். இதனால் திடீரென பாதிக்கப்படுவர்கள் சீக்கரமே குணமடைய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இணை நோய்கள் கொண்டிருந்தாலோ அல்லது வயது காரணமாகவோ வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். 

இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

ஸ்ட்ரோக் திடீரென ஏற்படக்கூடிய பிரச்னையாகும். பார்லர் மற்றும் சலூன்களுக்கு செல்லும் போது, தலை திடீரென திருப்பப்படக் கூடாது. அதை தவிர்க்க பணியாற்றும் அழகு நிலைய ஊழியர்களிடம், மென்மைப்போக்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள். கழுத்தை ஹைப்பர் எக்ஸ்டென்ஷனுடன் முடியைக் கழுவும்போது உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனடியாகப் படுத்துக் கொள்ளுங்கள். அதையடுத்து உடனடியாக மருத்துவரை சென்று பாருங்கள். மேலும் ஹார்வாஷ் செய்யும் போது கழுத்தை பின்னோக்கி நீட்டுவதை தவிர்த்திடுங்கள். கழுத்தை நீட்டிக்க வேண்டும் என்றால், அதை 20 டிகிரிக்குள் குறைவாக செய்வது பொருத்தமாக இருக்கும். 

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா- அந்த நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

நடைமுறையில் எந்தவொரு நோயையும் தடுக்கும் போது உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் இருதயத்தையும் உடலையும் ஊட்டமளிக்கிறது மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஜிம், யோகா அல்லது பிராணயாமா போன்ற எந்த வகையான உடற்பயிற்சியும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உங்கள் கணையம் சரியாக செயல்படுவதை உறுதி செய்யவும் உதவும். வெள்ளைச் சர்க்கரை, பெரும்பாலும் காலியான கலோரிகளைக் கொண்டது. அதை தினமும் உட்கொள்வதில் எந்த பலனும் இல்லை. பழங்கள், வெல்லம் அல்லது தேன் போன்ற இயற்கை சர்க்கரை வடிவங்களுக்கு மாறுவது நல்ல பலனை தரும். அஸ்பாரகஸ், கூனைப்பூ, வெண்ணெய், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை உங்களுடைய உணவுகளில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆண்களை விடவும் பெண்கள் அதிகமானோர் குண்டாக இருப்பதற்கு காரணம் இதுதான்..!!

சீக்கரம் சாப்பிட்டு சீக்கரம் தூங்குங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது எளிதாக தோன்றலாம். ஆனால் இன்றைய காலத்தில் அது சற்று கடினமாகவே உள்ளது. நீங்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை, உங்களுடைய இருதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்த ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு உணவிற்கும் இடையில் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு உணவிற்கும் இடையில் குறைந்தது 3 மணி நேரம் போதிய இடைவெளி வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் உங்களுடைய இருதயத்துக்கு நல்ல் ஆரோக்கியம் கிடைக்கிறது என்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும். 

Follow Us:
Download App:
  • android
  • ios