Skin Care : இந்த பழத்த அடிக்கடி சாப்பிடுங்க... அதிசியம் நடக்கும் நம்புங்க..!!
குளிர்காலத்தில் சரும பிரச்சனைகள் அதிகம். வறண்ட சூழல் மற்றும் தூசி போன்ற பிரச்னைகளால் தோல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். னால் சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் உங்கள் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
பப்பாளி உங்கள் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான பழமாகும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற சத்துக்களால் உங்கள் சருமத்தை அழகாக பராமரிக்க முடியும். மேலும் இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுவதால், உங்களுடைய உடலுக்கு போதிய நீரேற்றம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
பப்பாளி பழம் சருமத்தில் உள்ள கறைகளை போக்க உதவும். பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இந்த நொதி சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், சருமத்தில் உள்ள நிறமிகளை அகற்றவும் மிகவும் உதவியாக இருக்கும். இதன்மூலம் உங்களுடைய சருமம் மிருதுவடையும். பப்பாளியில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது சருமத்தை மேலும் பிரகாசமாக்குகிறது மற்றும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வறண்ட சரும பிரச்சனைகள் இருக்காது மற்றும் தோல் ஈரப்பதமடையும். பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும வறட்சியைத் தடுக்கிறது. இது உங்கள் சருமத்தை மேலும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. பப்பாளி கூழ் முகத்தில் தடவினால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெல்லத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கா? அட... இது தெரியாம போச்சே..!!
பப்பாளியில் வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி, சுருக்கங்களை நீக்கும். பப்பாளி தோலில் என்சைம்ககள் இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. தீக்காயங்கள் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இயற்கை மருந்தாகவும் பப்பாளி செயல்படுகிறது.
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதி, இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவுகிறது. சருமத்தில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடுகிறது. அரிக்கும் தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது. மேலும் அரிப்பினால் ஏற்படும் தோல் சிவத்தை பிரச்னையையும் கலைந்துவிடும். இதற்கு பப்பாளி கூழ் நேரடியாக தோலில் தடவவும். பப்பாளியில் உள்ள நன்மை பயக்கும் என்சைம்கள் மற்றும் தாவர அடிப்படையிலான ஆக்ஸிஜனேற்றங்கள் சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களை திறம்பட நீக்குகின்றன.