Asianet News TamilAsianet News Tamil

எடை இழப்புக்கு கீட்டோ டயட்டை பின்பற்றலாமா வேண்டாம்? நிபுணர்கள் கூறுவது இதுதான்..!!

கீட்டோ டயட்டைப் பின்பற்றும் முன், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறிந்துகொள்வது முக்கியம். அந்த நோக்கத்தில் தான் கீழே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
 

keto diet advantages and disadvantages here
Author
First Published Jan 5, 2023, 1:37 PM IST

உடல் எடையை குறைக்க மக்கள் பல உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் மிகவும் பிரபலமான உணவு முறை தான் கீட்டோ டயட். ந்த உணவின் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. கீட்டோவைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் உள்ளன, இது 'கெட்டோஜெனிக் உணவு' என்று அழைக்கப்படுகிறது. சிலர் இதை ஆரோக்கியமானதாகவும், சிலர் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருதுகின்றனர்.நீங்களும் உடல் எடையை குறைக்க கீட்டோ டயட்டை பின்பற்ற நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கண்டிப்பாக படிக்கவும்.

கீட்டோ டயட் என்றால் என்ன?

கெட்டோஜெனிக் உணவு என்பது அதிக கொழுப்புள்ள உணவு. இதில் கார்போஹைட்ரேட்டின் அளவு மிகவும் குறைவு. புரதத்தின் அளவு நடுத்தரமானதாக இருக்கும். கீட்டோ உணவில், நம் உடல் ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நிலை கெட்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. நமது உடல் கார்போஹைட்ரேட் மூலம் ஆற்றலைப் பெறுகிறது. இது நடக்காதபோது, ​​​​உடல் கொழுப்பிலிருந்து ஆற்றலைப் பெறுகிறது. உங்கள் உடலில் கொழுப்பு இல்லை என்றால், உங்கள் உடல் உங்கள் தசைகளை எரிப்பதன் மூலம் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.

இது எப்படி செயல்படும்?

கீட்டோ உணவில், நீங்கள் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்கிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், ஆற்றலை உருவாக்குவதற்கு கார்போஹைட்ரேட்டுகள் இல்லை என்று உடலுக்குத் தெரியும், எனவே அது கொழுப்பிலிருந்து ஆற்றலை எடுக்கத் தொடங்குகிறது. உங்கள் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு உங்கள் சேமிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் கெட்டோ கட்டத்தில் ஏற்கனவே இருக்கும் கொழுப்பினை ஆற்றல் எரிக்க துவங்கும். இந்த வழியில் உங்கள் கொழுப்பு குறைவாக இருக்கும். படிப்படியாக உடல் எடை குறைய ஆரம்பித்து, மெலிந்து காணப்படுவீர்கள்.

இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

கீட்டோ உணவு உண்மையில் எடை இழப்புக்கு உதவுகிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது மற்றும் பசியைக் குறைக்கிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. கால்-கை வலிப்புத்தாக்கங்களில் இருந்து பாதுகாக்குகிறது. கீட்டோ டயட் உதவிகரமாக இருப்பதாக சில ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. பல உணவு நிபுணர்களின் கூற்றுப்படி, கெட்டோ டயட்டை சரியாக எடுத்துக் கொண்டால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது. சருமத்தில் பருக்கள் மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளும் குறைந்துவிடும்.

தினசரி வெந்நீரில் குளிக்கும் ஆண்களே...!! இனி உஷாரா இருங்க..!!

கீட்டோ டயட்டை சரியாக பின்பற்ற வேண்டும்

நீங்கள் கீட்டோ டயட்டில் இருந்தால், ஒவ்வொரு உணவிலும் புரதம், கார்ப் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்து வர வேண்டும். கொழுப்பு-70 சதவீதம், புரதம்-25 சதவீதம், கார்போஹைட்ரேட்-5 சதவீதம் இருக்க வேண்டும்.

கெட்டோ டயட்டைப் பின்பற்றும் முன் நிபுணர் கருத்து

எந்தவொரு உணவையும் பின்பற்றுவதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். அவர்கள் உங்கள் மருத்துவ நிலையின் அடிப்படையில் ஆலோசனை வழங்குகிறார்கள். இந்த டயட்டை தவறான முறையில் பின்பற்றினால், குறைந்த ரத்த அழுத்தம், பலவீனம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். அதனால் முழுவதுமாக உடல் எடை பரிசோதனை செய்துகொண்டு, நிபுணர்களை கலந்தாலோசித்துவிட்டு டயட் செயல்முறையில் இறங்குங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios