முகப்பருக்களால் அவதிப்படுறீங்களா? கவலையை விடுங்க... இந்த ஃபேஸ் ஸ்க்ரப் ட்ரை பண்ணுங்க..!!
உங்கள் முகத்தில் உள்ள பருக்களை நீக்க துளசி இலைகளை வைத்து முக ஸ்க்ரப் செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தில் துளசியை வழிபடுவது உண்டு. ஆயுர்வேதத்திலும் துளசிக்கு வித்தியாசமான முக்கியத்துவம் உண்டு. அந்தவகையில், துளசி உங்கள் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அப்படிப்பட்ட நிலையில், துளசியைக் கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஏனெனில், துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை வாரம் 2 முறை துளசி செய்து வந்தால், அது உங்கள் முகத்திற்கு மாயாஜாலப் பொலிவைத் தரும், எனவே துளசி ஃபேஸ் ஸ்க்ரப் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
துளசி இலைகள் - 10
பால் - தேவையான அளவு
துளசி ஃபேஸ் ஸ்க்ரப் செய்வது எப்படி?
- இந்த ஸ்க்ரப் செய்ய முதலில் துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அவற்றை பேஸ்ட் போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அதன் பிறகு, தேவைக்கேற்ப பால் அதில் சேர்க்கவும்.
- பின் இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- இப்போது உங்கள் துளசி ஃபேஸ் ஸ்க்ரப் தயார்.
துளசி ஃபேஸ் ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி?
- துளசி ஃபேஸ் ஸ்க்ரப் பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்கு கழுவி துடைக்கவும்.
- பிறகு தயாரித்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் நன்கு தடவவும்.
- சுமார் 20 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
- பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரால் நன்கு கழுவவும்.
- இதை நீங்கள் வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.
- இதனால், உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் எளிதில் மறைந்துவிடும்.