Warts: மருக்களை விழ வைக்க என்ன செய்யலாம்? இதோ வீட்டு வைத்திய முறைகள்!
நம் உடலில் மருக்கள் வருவது, அனைவருக்குமே பிடிக்காத ஒன்று. இப்போது இளம் வயதிலேயே குழந்தைகள், மருக்கள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மருக்களை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
மருக்களை நீக்க டக்ட் டேப் முறை
மருக்களை நீக்க டக்ட் டேப் முறை, மிகவும் எளிமையானது மற்றும் பல வருடங்களாக நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய டேப்பை மருவின் மேல் உறுதியாக வைத்து, 6 நாட்களுக்கு அப்படியே வைத்திருக்கும் படி செய்ய வேண்டும். ஆறாவது நாளில் டேப்பை நீக்கி தண்ணீரில் 20 நிமிடங்கள் சருமத்தை நனைக்க வேண்டும். மென்மையான ப்யூமிஸ் ஸ்டோன் அல்லது புதிய எமரி போர்டு கொண்டு மெதுவாக தேய்த்தால் மருக்கள் உதிர்ந்து விடும்.
தேயிலை மர எண்ணெய்
நீர்த்த தேயிலை மர எண்ணெயை மருக்கள் மீது பயன்படுத்தினால் மருக்கள் உதிர்ந்து விடும். சில மணி நேரங்கள் இதை அப்படியே வைக்க வேண்டும். தேயிலை மர எண்ணெயை 3 துளிகள் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து, பருத்தி காட்டன் துணியைக் கொண்டு மருக்கள் மீது வைத்து எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.
ஆண்களே இது உங்களுக்கு தான்: விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த இந்த விதைகள் போதும்!
நெயில் பாலிஷ்
மருக்களின் மீது இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் வரை நெயில்பாலிஷ் வையுங்கள். இதனை நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். இது, மருவுக்கு செல்கின்ற ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்க உதவுவதால், மருக்கள் விழ வாய்ப்புண்டு.
ஆஸ்ப்ரின்
ஆஸ்ப்ரின் மருந்துகளில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. நொறுக்கப்பட்ட ஆஸ்ப்ரின் மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, மருக்கள் மீது தடவி இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலையில் சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து இம்முறையைச் செய்தால் மருக்கள் விழுந்து விடும்.
Jackfruit Seed: அற்பதப் பலன்களை அள்ளித் தரும் பலாக் கொட்டைகள்!
வைடடமின் ஈ மற்றும் சி மாத்திரைகள்
வைட்டமின் ஈ மற்றும் சி மாத்திரைகளை எண்ணெயை சேர்த்து, மருவின் மீது தடவி வரவும். அதனை கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் குளிக்க வேண்டும். இரு வாரங்கள் தொடர்ந்து இதைச் செய்தால், மருக்கள் உதிர்ந்து விடும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை தொடர்ந்து மருக்களின் மீது தடவி வந்தாலும், படிப்படியாக மருக்கள் வலுவிழந்து உதிர்ந்து விடும். மருக்களால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பும் நீங்கும். சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் கற்றாழை உதவும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை மருக்களின் மீது, தினசரி மூன்று வாரங்கள் வரை தொடர்ந்து தடவி விடவும். மருக்கள் விழும் வரையிலும் கூட எண்ணெயை தடவலாம்.
மருக்களை விழ வைக்க கடுமையாக தேய்க்கவோ இழுக்கவோ கூடாது. சில சமயங்களில் அது மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். எச்சரிக்கையாக அணுக வேண்டும் அல்லது மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.