மழையில் நனைந்து விட்டீர்கள் என்றால் உடனடியாக உங்களது கூந்தலை பாதுகாப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோடைகாலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் கூட கூந்தல் மோசமாகும்ம் அதாவது மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். இதனால் கூந்தலில் அழுக்குகள் தேங்கி, தலைமுடியை பலவீனப்படுத்தும். அதுமட்டுமின்றி, மழை நீரின் நனைந்தால் தலைமுடியில் இருந்து ஒரு விதமான நாற்றம் அடிக்கும். அதிலும் உங்களது உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருந்தால் இந்த பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மழையில் நனைந்து விட்டால் உடனே உங்களது தலை முடியை பாதுகாப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மழை நீரால் தலைமுடிக்கு ஏற்படும் பிரச்சனைகள் :
மழைநீர் தலை முடியை மிக மோசமாக பாதிக்கும். முடி கொட்டுதல், உடைதல், வறட்சி, பேன் போன்ற எல்லா பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் மழை நீர் உச்சந்தலையில் நேரடியாகப்படுவதால் அது உச்சந்தலையில் இயற்கையான பிஹெச் அளவை சீர்குலைத்து முடியை மங்கு செய்துவிடும். இதனால் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளும் வரும்.
மழையில் நனைந்தால் தலை முடியை பாதுகாக்க உடனே செய்ய வேண்டியவை :
1. கூந்தலை உடனே அலசவும்
நீங்கள் மழையில் வீட்டிற்கு வந்த உடனே தலைக்கு குளித்து விடுங்கள். மேலும் மழை நீரின் மாசு போன்றவை நீக்க தலைக்கு ஷாம்பு போட்டு, விரல்களால் நன்கு மசாஜ் செய்து குளிக்கவும். ஆனால் வெந்நீரில் அல்ல.
2. கண்டிஷனர் போடலாமா?
மழை நீரால் தலைமுடி உதிர்வு அதிகமாகவே இருக்கும் எனவே உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்க கண்டிஷனர் போடுங்கள். இது தலை முடியின் மென்மை தன்மையை பாதுகாக்கும்.
3. ஹேர் ட்ரையர் பயன்படுத்தலாமா?
தலைமுடியை காய வைக்க ஹேர் ட்ரையர் போடுவது சரி என்று நீங்கள் நினைப்பது தவறு. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே மழைநீரில் நனைந்து விட்டீர்கள். இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் ஹேர் ட்ரையர் பயன்படுத்தி உங்களது முடியின் வேரை பலவீனமாக்காதீர்கள். உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்கனவே இருந்தால் அவை இன்னும் அதிகரிக்கும். எனவே மென்மையான துண்டை கொண்டு உச்சந்தலையில் இருக்கும் நீரை அகற்றவும். தேவையென்றால் ஃபேன் அருகே அமர்ந்து தலைமுடியை காய வைக்கலாம். இது முடி உதிர்வை தடுக்க கூடியதுதான்.
மழைக்காலத்தில் தலை முடியை பராமரிப்பது எப்படி?
- வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே தலைக்கு குளித்தால் போதும்.
- மழைக்காலத்தில் சில தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க தலைக்குளியலுக்கு முன்பு உச்சந்தலையில் எண்ணெய் தேய்க்கலாம்.
- எப்போதுமே தலையை விரித்து வைக்காமல் போனிடெயில் போடலாம் இது முடி உதிர்தலை தடுக்கும் மற்றும் உலர்வாக வைக்கும்.
