Fenugreek: நரைமுடியை கருமையாக்க வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும்? தெரியுமா உங்களுக்கு?
நரைமுடியைத் தடுக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் பயன்படும் பொருள் தான் வெந்தயம். இதனைப் எப்படி பயன்படுத்த வேண்டும் என இப்போது பார்ப்போம்.
இன்றைய இளம் தலைமுறையினர் இடையே காணப்படும் பொதுவான பிரச்சனை என்றால், அது நரைமுடி மற்றும் முடி உதிர்தல் தான். இதனைத் தடுக்க பலரும் பல வகைகளில், பல முயற்சிகளை மேற்கொண்டும் பயனில்லாமல் போகிறது. ஆனால், இந்தப் பிரச்சனைகளை முற்றிலுமாகத் தவிர்க்க, நம் வீட்டு சமையலறையிலேயே உள்ள ஒரு பொருள் உதவிகரமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நரைமுடியைத் தடுக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் பயன்படும் பொருள் தான் வெந்தயம். இதனைப் எப்படி பயன்படுத்த வேண்டும் என இப்போது பார்ப்போம்.
வெந்தயம்
நரைமுடியை கருப்பாக மாற்ற நினைக்கத் தான் பலரும் விரும்புகின்றனர். இதற்காக செயற்கை முறைகளை பலரும் நாடி வருகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியத்தில் நிச்சயம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இருப்பினும், இயற்கை முறையிலேயே நரைமுடியை கருப்பாக மாற்றலாம்.
ஆம்! உண்மை தான். வெல்லம் மற்றும் வெந்தயத்தை தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வெள்ளை முடியானது இயற்கையாகவே கருப்பாக மாறி விடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. ஆனால், இதனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் அதனுடைய பலன் இரு மடங்காக நமக்கு கிடைக்கும்.
நரைமுடியை கருமையாக்க
வெந்தயத்தை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். தினந்தோறும் காலையில் எழுந்ததும், வெந்தயப் பொடியை வெல்லத்துடன் சாப்பிட்டு வர வேண்டும். இந்த ரெசிபியை சில நாட்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், முன்கூட்டியே முடி நரைப்பது நின்று விடுவது மட்டுமின்றி, மிச்சமிருக்கும் வெள்ளை முடியும், மீண்டும் கருமையாக மாறி விடும்.
நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற "கோதுமை சேமியா கிச்சடி"!
முடி உதிர்வைத் தடுக்க
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அதனை அரைத்துக் கொள்ள வேண்டும். தலையை ஒருமுறை நன்றாக அலசியதும், தலைமுடி காய்ந்த பின்னர் அரைத்து வைத்த வெந்தயத்தை தலை முழுவதும் தடவ வேண்டும். முக்கியமாக முடியின் வேர்களில் படும்படி நன்றாக தடவ வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்று விடும்.
ஊறவைத்த வெந்தயம்
ஒரு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தய விதைகளை காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். உங்களுக்கு அதன் சுவை பிடிக்கவில்லை எனில், அவற்றை உங்கள் பருப்பு மற்றும் காய்கறிகளில் சேர்த்தும் சாப்பிடலாம். ஒரு நாளில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை விட அதிகமாக சாப்பிட வேண்டாம். 21 நாட்களுக்கு வெந்தயத்தை சாப்பிட்டு வரும் போது, உடலில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.