Beauty Tips: அழகான செதுக்கியது போல கூர்மையான தாடை வேணுமா? சிம்பிள் டிப்ஸ்!!
முகத்திலும் கழுத்திலும் கொழுப்பு சேர்ந்திருந்தால் தடை அகன்று காணப்படும். முகத்தின் வடிவமைப்பும் பெரிதாக அகலமாக இருக்கும். எனவே அழகான தாடையை பெற சில பயிற்சிகளை செய்ய வேண்டும்.
முகத்தில் சேரும் கொழுப்பு:
உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதை விட முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயம். ஆனால், இதற்கு பல எளிய வழிமுறைகள் இருக்கின்றன. தாடையை அழகாக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
பயிற்சி அவசியம்:
முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க முன்னும் பின்னுமாக அசைத்து பயிற்சி செய்தால் கொழுப்பை குறைக்கலாம். இந்த பயிற்சியை 8 முதல் 10 முறை செய்யலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். நாக்கால் அவ்வப்போது மூக்கை தொடலாம். இதுவும் ஒரு பயிற்சி.
சத்தான காய்கறிகள்:
உணவுப்பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான சத்தான உணவுகளை சாப்பிட்டால் முகத்தில் கொழுப்பு வருவதை குறைக்கலாம். இது முகத்திற்கு அழகு கொடுக்கும். கொழுப்பு அதிகமாக உணவுகளை சாப்பிட வேண்டும்.
சரியான தூக்கம் அவசியம்
தூக்கம கெட்டு இருந்தால் முகமும், கண்களும் காட்டிக்கொடுத்து விடும். கண்டிப்பாக 8 மணி நேர தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். தூக்கமின்மையும் முகத்தில் சதை போடுவதற்கு ஒரு காரணம்.
உடல் நலனை பாதிக்கும்
தூக்கமின்மை பிரச்சினையால் நம் உடலில் உள்ள கார்டிசோல் என்ற ஹார்மோன் மாறிவிடும். இது, நம் மனநலனையும் உடல் நலனையும் பாதிக்கும். இதனால் உடலிலும் மற்றும் முகத்திலும் கொழுப்பு சேர வாய்ப்பு இருக்கிறது. இதனால், 8 மணி நேரம் தூக்கம் முக்கியம்.