ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதா? இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை. இந்த விஷயத்தில் இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றால், இந்தியப் பொருட்கள் மீதான தற்போதைய வரிகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றால், இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா அதிகரிக்கக்கூடும் என்று டிரம்ப் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
விரைவில் வரியை உயர்த்துவோம் - டிரம்ப்
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா உதவவில்லை என்றால், வரியை உயர்த்துவோம். பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும் என டிரம்ப் கூறியுள்ளார்.
ஏற்கனவே பதிலளித்த இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூறியதை, இந்திய அரசு உடனடியாக மறுத்தது. அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்றது.
ரஷ்ய எண்ணெய் குறித்த சர்ச்சை
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா எதிர்க்கிறது. இந்த பணத்தை உக்ரைன் போருக்கு ரஷ்யா பயன்படுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
இந்தியாவுக்கு ரஷ்யா ஏன் முக்கியம்?
தற்போது ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையர். மலிவான ரஷ்ய எண்ணெய், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தியாவிற்கு உதவுகிறது.

