- Home
- உலகம்
- மதுரோவை கைது செய்ய ரூ.1,11,00,00,00,000 கோடி செலவிட்ட அமெரிக்கா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டிரம்ப்..!
மதுரோவை கைது செய்ய ரூ.1,11,00,00,00,000 கோடி செலவிட்ட அமெரிக்கா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டிரம்ப்..!
ஒசாமா பின்லேடனை விட மதுரோவை கைது செய்ய இரண்டு மடங்கு பரிசுத்தொகை அமெரிக்க அரசால் வழங்கப்பட்டது.

மதுரோ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா
போதை பொருள் கடத்தல், போதை சார்ந்த பயங்கரவாத செயல்களை அமெரிக்காவில் நிகழ்த்த திட்டம் தீட்டியதாக தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்க படைகள் வெனிசுலா தலைநகர் காரகஸ் மீது அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டன. இதில் டெல்டா படையினர், எலைட் கமாண்டோக்கள் மற்றும் சிஐஏ - எப்பிஐ உளவு அமைப்பினர் ஈடுபட்டனர். அதிபரின் கோட்டைக்குள் நுழைந்த அவர்கள் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர்.
'ஆப்பரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' எனும் இந்த ராணுவ நடவடிக்கையின் போது, வெனிசுலாவில் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட அதிபர் மதுரோவும், அவரது மனைவி சிலியாவும் நியூயார்க் அழைத்து வரப்பட்டனர். மதுரோ அழைத்து வரப்பட்ட வீடியோவை அமெரிக்கா நேற்று வெளியிட்டது.
ஆபரேஷன் சதர்ன் ஸ்பியரைத் தொடங்கிய அமெரிக்கா
2025ம் ஆண்டில் மட்டும், வெனிசுலா தலைநகரில் இருந்து அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்யும் முயற்சிக்காக மட்டும் அமெரிக்கா பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் செலவிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் பதவியேற்றபோது செலவினங்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர் கூறிய ‘‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்’’ என்கிற கொள்கைக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்ப், ‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்’ என்று முழங்கினார். அதாவது அமெரிக்கா வேறு நாட்டில் நடவடிக்கைகளுக்கோ அல்லது இராணுவ நடவடிக்கைக்கோ ஒரு பைசா கூட செலவிடாது’’ என்று கூறினார். அப்போது அவரது இந்தப்பேச்சு அமெரிக்க மக்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்ய அமெரிக்க செலவிட்ட தொகையை கேட்டால் தலையே சுற்றுகிறது.
மதுரோவை கைது செய்ய, அமெரிக்கா செப்டம்பர் 2025 -ல் ஆபரேஷன் சதர்ன் ஸ்பியரைத் தொடங்கியது. டிஃபென்ஸ் ஒன் பத்திரிகையின் தகவல்படி, ஒரு போர்க்கப்பல், ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், ஒரு ஜெரால்ட் ஃபோர்டு இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்றின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 61 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 கோடி செலவு
இந்த நடவடிக்கைக்காக 83 போர் விமானங்கள், 10 எஃப்-35 ஜெட் விமானங்கள், ஏழு ரீப்பர் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த மூன்றின் விலை 27 ஆயிரம் கோடி ரூபாய். வெனிசுலாவை முற்றுகையிட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக ரூ.3 கோடி செலவாகும். இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் செப்டம்பர் முதல் ஜனவரி வரை சுமார் 3,700 மணிநேரம் எடுத்தது.
வெனிசுலாவின் அதிபர் மதுரோவை கைது செய்ததற்காக அமெரிக்க அமைப்புகளுக்கு ரூ.450 கோடி பரிசு வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு உடனடியாக அதிகாரிகளுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது. ஹெலிகாப்டரை தரையிறக்கிய விமானிக்கு தோராயமாக 18 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் பணமும் அமெரிக்க நிதியில் இருந்து பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒசாமா பின்லேடனை விட மதுரோவை கைது செய்ய இரண்டு மடங்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மதுரோவுக்கு எதிராக சிஐஏ ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது. வெள்ளை மாளிகையின் தகவல்படி, இந்த ஆண்டு சிஐஏவுக்கு ரூ. 9 லட்சம் கோடி பட்ஜெட் வழங்கப்பட்டது. இதில், 6 லட்சத்து 590 ஆயிரம் கோடி ரூபாய் உளவுத்துறை சேகரிப்புக்காகவும், 2லட்சத்து 5,27 ஆயிரம் கோடி ரூபாய் இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பெரும்பாலானவை வெனிசுலாவுக்கு செலவிடப்பட்டுள்ளன.
மதுரோவின் கைது அமெரிக்காவின் மிகவும் விலையுயர்ந்த இராணுவ நடவடிக்கையாக கூறப்படுகிறது. மதுரோவைப் பிடிக்க அமெரிக்கா 150 ஹெலிகாப்டர்களை அனுப்பியது. தலைநகர் கராகஸைச் சுற்றி பத்தாயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். ஆகஸ்ட் 2025 முதல் அமெரிக்க வீரர்கள் தாக்குதலைத் திட்டமிட்டு வந்தனர்.
மதுரோவை போதைப்பொருள் மன்னனாக விளம்பரப்படுத்திய அமெரிக்கா
2020-ல் வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு நடவடிக்கையைத் தொடங்க முயற்சித்தது. ஆனால் அது தோல்வியடைந்தது. இந்த முறை, நடவடிக்கையை நடத்துவதில் அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டது. முதலாவதாக, மேற்கத்திய ஊடகங்களில் மதுரோவை ஒரு போதைப்பொருள் மன்னனாக அமெரிக்கா விளம்பரப்படுத்தியது.
இதன் பின்னர், அமெரிக்கா கராகஸை எல்லா பக்கங்களில் இருந்தும் சுற்றி வளைத்தது. மதுரோவை அங்கிருந்து அகற்றுவதே டிரம்பின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவிற்கு அடிபணிய மதுரோ மறுத்துவிட்டார். பின்னர் ஜனாதிபதி டிரம்ப் இந்த நடவடிக்கையின் பொறுப்பை மார்கோ ரூபியோவிடம் ஒப்படைத்தார்.
ரூபியோ, போர் செயலாளர் பீட் ஹெக்செத், சிஐஏ தலைவருடன் சேர்ந்து, மதுரோவையும், அவரது மனைவி சிலியாவையும் கைது செய்து அமெரிக்கச் சிறையில் அடைத்துள்ளனர்.
