- Home
- உலகம்
- சோஃபியா குரேஷி பெயரை சொன்னதும் வெடவெடத்துப்போன பாக். தலைவர்; பத்திரிகையாளரின் தக் லைஃப் சம்பவம்
சோஃபியா குரேஷி பெயரை சொன்னதும் வெடவெடத்துப்போன பாக். தலைவர்; பத்திரிகையாளரின் தக் லைஃப் சம்பவம்
இந்தியாவில் முஸ்லிம்களை கொடூரமானவர்களாக சித்தரிக்க பஹல்காம் தாக்குதல் பயன்படுத்தப்படுகிறது என்ற பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு பத்திரிகையாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

Journalist Shuts Bilawal Bhutto Down With Colonel Sofiya Qureshi Reference
'இந்தியாவில் முஸ்லிம்களை கொடூரமானவர்களாக சித்தரிக்க பஹல்காம் தாக்குதலை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்' என்று பாகிஸ்தானின் பிபிபி தலைவர் பிலாவல் பூட்டோ கூறி உள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டிற்கு , பத்திரிகையாளர் சந்திப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் அஹ்மத் ஃபாத்தி, கர்னல் சோஃபியா குரேஷியின் பெயரை குறிப்பிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிலாவல் பூட்டோவுக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்
அஹ்மத் ஃபாத்தி பேசுகையில் 'பூட்டோ அவர்களே, நீங்கள் இப்படி சொல்கிறீர்களே. பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் தகவலை வழங்கிய அந்த பெண் ராணுவ அதிகாரி (கர்னல் சோஃபியா குரேஷி) யார்?' என்று கேட்டார். அப்போது பூட்டோ வாயடைத்துப் போனார்.
பஹல்காம் தாக்குதல்
இந்திய சுற்றுலாத்தலமான பஹல்காமில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, 26 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
சோஃபியா குரேஷி, வ்யோமிகா சிங்
இந்த வெற்றிகரமான ஆபரேஷன் சிந்தூரின் தகவலை கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் ஊடகங்களுக்கு வழங்கினர். கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வ்யோமிகா சிங் இருவரும் பெண்கள். சிந்தூர் நடவடிக்கையைப் பற்றி நுணுக்கமாகவும் மிகத் தெளிவாகவும் உலகிற்கு இவர்கள் இருவரும் கூறினர்.
கர்னல் சோஃபியா குரேஷி
சர்வதேச ஊடகங்கள் முன்பு அளந்து, ஒவ்வொரு வார்த்தையையும் தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்தியதற்கும், சோஃபியா குரேஷி, வ்யோமிகா சிங் நடத்திய முழு பத்திரிகையாளர் சந்திப்பையும் உலகம் முழுவதும் பாராட்டியது.