பாகிஸ்தான் பல இடங்களில் இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. 

இந்தியா- பாகிஸ்தான இடையே நேற்று இரவு முதல் இன்று காலை வரை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் போர் உடைகளில் தோன்றினர். இந்தியா உஷார் நிலையில் உள்ளது என்றும் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பை பொறுத்துக்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.

மே 7 முதல் 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் 15 இடங்களில் இந்திய இராணுவ தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்திய பின்னர், சூழ்நிலையின் தீவிரத்தை பிரதிபலிக்கும் வகையில், சீருடை அணிந்த அதிகாரிகளை செய்தியாளர் சந்திப்பில் களமிறங்கினர். கர்னல் குரேஷி செய்தியாளர்கள் சந்திப்பின் போது,"மே 7 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

ஆனால் மே 7 மற்றும் 8 ஆம் தேதி இடைப்பட்ட இரவில், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அவந்திபோரா, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா போன்ற பல ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது'' என்றார். இருப்பினும், இந்திய இராணுவ சொத்துக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கிடைக்கும் என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம்” என்று கூறினார்.

#WATCH | Delhi: Wing Commander Vyomika Singh says, "Pakistan has increased the intensity of its unprovoked firing across the Line of Control using Mortars and heavy calibre Artillery in areas in Kupwara, Baramulla, Uri, Poonch, Mendhar and Rajouri sectors in Jammu and Kashmir. 16… pic.twitter.com/6ahtrYriiC

— ANI (@ANI) May 8, 2025

அவந்திப்போரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நால், பலோடி, உத்தர்லை மற்றும் புஜ் உட்பட வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள இந்திய இராணுவ இலக்குகளைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. இந்திய பாதுகாப்பை முறியடிக்கும் ஒருங்கிணைந்த முயற்சியில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன. “இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கவுண்டர்-யுஏஎஸ் கிரிட் மற்றும் ஏர் டிஃபென்ஸ் அமைப்புகளால் நடுவானில் முறியடிக்கப்பட்டது” என்று கர்னல் குரேஷி உறுதிப்படுத்தினார். 

 எதிர் தாக்குதலில், இந்தியப் படைகள் பாகிஸ்தான் இராணுவ நிலைகளை குறிவைத்து பதிலடி கொடுத்தன - “இன்று காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைக் குறிவைத்தன” என்று குரேஷி கூறினார். “லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்தினார். . 

விங் கமாண்டர் வியோமிகா சிங், செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் தொடர்ந்து மோட்டார் மற்றும் கனரக பீரங்கி குண்டுகளை குப்வாரா, பரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ராஜோரி பகுதிகளில் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

#WATCH | Delhi: Wing Commander Vyomika Singh says, "Pakistan has increased the intensity of its unprovoked firing across the Line of Control using Mortars and heavy calibre Artillery in areas in Kupwara, Baramulla, Uri, Poonch, Mendhar and Rajouri sectors in Jammu and Kashmir. 16… pic.twitter.com/6ahtrYriiC

— ANI (@ANI) May 8, 2025

“மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன” என்று அவர் தெரிவித்தார். “எதிரித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான் தற்போது உ்ள்ள நிலைமையை மதிக்கும் பட்சத்தில், மோதலைத் தீவிரப்படுத்தாமல் இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.