
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாமை சல்லடையாக்கிய இந்திய ஏவுகணைகள் ! வைரல் வீடியோ!!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களின் வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன