- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Anna Serial: உண்மை தெரிந்ததால் அதிர்ச்சியில் ஷண்முகம்; முத்துபாண்டியால் நடக்க போவது என்ன? அண்ணா அப்டேட்!
Anna Serial: உண்மை தெரிந்ததால் அதிர்ச்சியில் ஷண்முகம்; முத்துபாண்டியால் நடக்க போவது என்ன? அண்ணா அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் தற்போது எதிர்பாராத திருப்புமுனையோடு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று என்ன நடக்கப்போவது என்ன என்பது பற்றி பார்ப்போம்.

'அண்ணா' சீரியல்:
'அண்ணா' சீரியல் திங்கள் முதல் சனிவரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய தினம்.. பரணி ஷண்முகம் மீது கோவமாக இருக்கும் நிலையில் இன்று நடைபெற உள்ளது என்ன என்பதை பார்ப்போம்.
பரணியை அமெரிக்காவுக்கு அழைக்கும் தம்பதி:
அமெரிக்க மருத்துவர், பரணி அந்த குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்ததை பற்றி தெரிந்து, நீங்கள் உங்கள் திறமைக்கு அமெரிக்காவில் இருக்க வேண்டியவர் என புகழ்ந்தால், அமெரிக்காவில் இருந்து திருச்செந்தூருக்கு சாமி கும்பிட வந்த அமெரிக்க தம்பதிகள், பரணியை அமெரிக்காவுக்கு அழைப்பதோடு அவரின் படிப்பு செலவையும் ஏற்பதாக கூறுகிறார்கள்.
பதறிய இசக்கி; ஷண்முகம் சொல்லியும் கேட்காமல் பரணி எடுத்த முடிவு! அண்ணா சீரியல் அப்டேட்!
சௌந்தரபாண்டி திட்டம்:
இது தான் சண்முகத்தின் குடும்பத்தை பிரிக்க சரியான சமயம் என நினைக்கும், சௌந்தரபாண்டி பரணியை அமெரிக்க அனுப்பி வைத்து விட்டு, சண்முகம் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். இந்த உண்மை சண்முகத்துக்கு தெரியவரவே தான் அவள் பரணியை அமெரிக்காவுக்கு போக வேண்டாம் என சொல்கிறான்.
சண்முகம் உண்மையை வெளிப்படுத்துவாரா?
ஆனால் இதை எப்படி பரணியிடம் சொல்வது என புரியாமல் ஒரு பக்கம் சண்முகம் தவிக்கு நிலையில், மறுபக்கம் இசக்கி... அண்ணா அப்படியெல்லாம் சொல்லுற ஆள் இல்ல. அது சொல்றதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என அடித்து பேசுகிறார். முத்துப்பாண்டியோ, தங்கை பரணியை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாகி இருக்கிறான்.
ட்ரோன் மூலம் குழந்தையை காப்பாற்றிய ஷண்முகத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி? 'அண்ணா' சீரியல் அப்டேட்!
சூடாமணி மகிழ்ச்சி:
சண்முகம் மீதி கோவம் இருந்தாலும், இதையெல்லாம் தாண்டி அடுத்த நாள் காலையில் எதையும் வெளிப்படுத்தாமல், பரணி வழக்கம் போல எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். பரணி ஒரு மருத்துவராக இருந்தாலும், அனைவருக்கும் தேவையானதை செய்து கொடுக்க வைகுண்டம் இதை பார்த்து சந்தோஷப்படுகிறார். சூடாமணிக்கு அடுத்து, பரணி தான் இந்த குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்கிறா.. அவ இல்லனா என்ன ஆகிறது என யோசிக்கிறார் மருமகளை பெருமையாக நினைக்கிறார்.
பரணியால் குழப்பத்தில் சண்முகம்
பின்னர் சண்முகம், பரணியை பார்த்து... எலே உன்ன கொண்டு போய் விடணுமா? என்று கேட்க இத்தனை நாளா நீதானே கொண்டு போய் விடுவ இன்னைக்கு நீதான் கொண்டு போய் விடனும் என்று சொல்கிறாள். சண்முகம் இந்த நேரத்துக்கு ஒரு சண்டை வெடித்து இருக்கணுமே இவ என்ன இப்படி சொல்றா என குழப்பம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? பரணி குடும்பத்துக்காக அமெரிக்க படிப்பை தியாகம் செய்வாளா? சௌந்தரபாண்டி எண்ணம் ஈடேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.