- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சூப்பர் ஹிட் சீரியலை திடீரென இழுத்து மூடும் ஜீ தமிழ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
சூப்பர் ஹிட் சீரியலை திடீரென இழுத்து மூடும் ஜீ தமிழ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிநடைபோட்டு வந்த சூப்பர் ஹிட் சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டுவர உள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Zee Tamil Serial End Soon
சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக வளர்ந்து வரும் சேனல் என்றால் அது ஜீ தமிழ் தான். இதில் மற்ற சேனல்களுக்கு போட்டியாக ஏராளமான ரியாலிட்டி ஷோக்களும், சின்னத்திரை சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை நெருங்கி வரும் பிரபல சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாம். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது எந்த சீரியல் என்பதை பார்க்கலாம்.
முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல் எது?
அந்த சீரியல் வேறெதுவுமில்லை, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிநடைபோட்டு வந்த அண்ணா சீரியல் தான். இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்துள்ளார். மிர்ச்சி செந்தில் சரவணன் மீனாட்சிக்கு பின் அதிக எபிசோடுகள் நடித்த சீரியல் இதுவாகும். அதேபோல் நித்யா ராம், நந்தினி என்கிற மெகா ஹிட் சீரியலுக்கு பின் தமிழில் நடித்த சீரியல் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த சீரியலுக்கு இருந்து வந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் இருந்தது.
ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரைம் டைம் சீரியலாக அண்ணா ஒளிபரப்பாகி வந்தது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் பொங்கலோடு முடிவுக்கு வர உள்ளதாம். இதன் கிளைமாக்ஸ் எபிசோடு அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள், கதையே இல்லாம ஓடுற சீரியலையெல்லாம் விட்டுட்டு, நல்ல கதையம்சத்தோட ஓடிக்கிட்டு இருக்க சீரியலை ஏண்டா முடிக்கிறீங்க என ஆதங்கத்தை கொட்டி வருகின்றன. சிலரோ ஆயிரம் எபிசோடு வரைக்குமாவது ஓட்டலாம் என வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
களமிறங்கும் புது சீரியல்
அண்ணா சீரியல் முடிவுக்கு வந்த கையோடு, அதற்கு பதிலாக புத்தம் புது சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சி களமிறக்க உள்ளது. அந்த சீரியலின் பெயர் வாகை சூடவா. சமீபத்தில் வெளியான இதன் புரோமோவுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பேமஸ் ஆன இர்ஃபான் நாயகனாக நடிக்கிறார். இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலிலும் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த இர்ஃபான், வாகை சூடவா தொடரின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். அந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

