- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஈஸ்வரி உடல்நிலை பற்றி டாக்டர் அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்..! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்!
ஈஸ்வரி உடல்நிலை பற்றி டாக்டர் அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்..! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்!
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வரும் ஈஸ்வரியின் உடல்நிலை பற்றி டாக்டர் கொடுத்துள்ள அதிர்ச்சி ரிப்போர்ட் என்ன என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
சன் டிவியில் அமோக வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மறுபுறம் வீட்டில் இருப்பவர்களை ஈஸ்வரியை பார்க்க செல்லக் கூடாது என உத்தரவிட்ட ஆதி குணசேகரன், மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதை அறிவுக்கரசி மூலம் தெரிந்துகொள்கிறார். அதேபோல் பார்கவி படிக்க கனடா செல்லும் விஷயமும் தர்ஷனுக்கு தெரியவருகிறது. இப்படி பல திருப்பங்களுடன் நேற்றைய எபிசோடு அனல்பறந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஈஸ்வரி உடல்நிலை பற்றி டாக்டர் சொன்னதென்ன?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஈஸ்வரி தலையில் கட்டோடு சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைப் பார்க்க உறவினர்களை டாக்டர் அனுமதிக்கிறார். அப்போது ஈஸ்வரியின் நிலையை பார்த்து அனைவரும் கண்ணீர் சிந்துகிறார்கள். பின்னர் ஈஸ்வரிக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி டாக்டர் விளக்குகிறார். அவரின் கழுத்தை நெரித்து, தலையை சுவற்றில் மோதி இருப்பது போல் தெரிகிறது என டாக்டர் சொன்னதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர். டாக்டர் சொன்னதை அடுத்து அனைவரின் சந்தேகமும் ஆதி குணசேகரன் மீது திரும்புகிறது.
ஆதி குணசேகரன் மீது எழும் சந்தேகம்
மறுபுறம் ஆஸ்பத்தியில் நடக்கும் விஷயங்கள் வீட்டில் பேசப்படுவதால் டென்ஷன் ஆகும் ஆதி குணசேகரன், அங்கு நடப்பதை வீட்டில் பேசக்கூடாது என உங்களுக்கு எத்தனை தடவ சொல்றது என கேட்கிறார். உடனே கரிகாலன், நான் ஆஸ்பத்திரியில் நடந்ததை பேசவில்லை, ஆனா வீட்டில் நடந்ததில் தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். கரிகாலனின் இந்த கேள்வியால் ஆதி குணசேகரன் வாயடைத்துப் போகிறார். இப்படி ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்களுக்கும் படிப்படியாக ஆதி குணசேகரன் மீது சந்தேகம் வருவதால் அடுத்து என்ன நடக்கபோகிறது என்கிற விறுவிறுப்போடு பயணிக்கிறது எதிர்நீச்சல் 2 சீரியல்.
சிக்குவாரா ஆதி குணசேகரன்?
டாக்டர் சொன்னதை அடுத்து ஜனனி, தர்ஷன், தர்ஷினி, ஜீவானந்தம், ரேணுகா, கொற்றவை, நந்தினி ஆகியோருக்கு, ஈஸ்வரியை அடித்தது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நேற்றே தர்ஷினி, கொற்றவையிடம் ஜீவானந்தம் தான் அம்மாவுக்கு இப்படி ஆனதற்கு காரணம் என கூறி இருந்தார். இன்று டாக்டர் ரிப்போர்டும் வெளியாகி இருப்பதால் ஆதி குணசேகரன் மீதான சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஈஸ்வரி கண்விழித்து அனைத்து உண்மையையும் சொல்லிவிட்டால் ஆதி குணசேகரன் கைதாவது உறுதி. அது நடக்குமா என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.