MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஈஸ்வரிக்காக ஆதி குணசேகரனை மிரட்டிய விசாலாட்சி... அரண்டுபோன கதிர், ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஈஸ்வரிக்காக ஆதி குணசேகரனை மிரட்டிய விசாலாட்சி... அரண்டுபோன கதிர், ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அவருக்காக ஆதி குணசேகரனிடம் சண்டை போட்டுள்ளார் விசாலாட்சி. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 26 2026, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி குணமாக உள்ள விஷயத்தை ஆதி குணசேகரன், கதிர், ஞானம், ஆகியோருக்கு தெரியாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த விசாலாட்சி, நேற்று போட்டுடைத்திருந்தார். இதைக்கேட்டதும் குணசேகரன் ஷாக் ஆகிப்போக, இதுக்காக தான் குலதெய்வம் டிராமா போட்டீங்களா என அறிவுக்கரசி நக்கலாக கேட்டார். உடனே அவருக்கு கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்ட விசாலாட்சி, ஈஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வர தான் ரேணுகா, நந்தினி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்றிருப்பதாக கூறி இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஆதி குணசேகரன் பிளாக்மெயில்
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரன் பிளாக்மெயில்

ஈஸ்வரி கோமாவில் இருப்பதால், தனக்கு எதிராக சாட்சி சொல்ல ஆளே இல்லை என்கிற மிதப்பில் இருந்தார் ஆதி குணசேகரன். தற்போது அவர் குணமான விஷயம் தெரிந்ததும் அவரின் வியூகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி இருக்கின்றன. இதனால் தன்னுடைய பிளானை மாற்றும் குணசேகரன், தனக்கு எதிராக மட்டும் அவர்கள் சாட்சி சொன்னால், ஞானம், அறிவு, கதிரு என எல்லாரும் ஆளாளுக்கு கையில கிடச்சத தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பிருவாங்க. ஒழுங்கு மரியாதையா எனக்கு எதிரான கேஸை அவளுகளிடம் பேசி வாபஸ் வாங்க சொல்லுங்க என விசாலாட்சியிடம் கூறுகிறார்.

Related Articles

Related image1
ஆலிவரின் மாஸ்டர் மைண்ட் யார்? மதிவதினியால் மாட்டப்போகும் பெரும்புள்ளி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
ஆதி குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த விசாலாட்சி; ஈஸ்வரியால் தடம் மாறும் கதைக்களம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
35
மிரட்டிய விசாலாட்சி
Image Credit : youtube/suntv

மிரட்டிய விசாலாட்சி

ஆனால் அதற்கெல்லாம் அசராத விசாலாட்சி, உங்களால் அவளுக்கு ஏதாச்சும் சின்ன பிரச்சனையாவது வந்துச்சுனா, என் பிள்ளைங்க இப்படி பண்றாங்கனு நடு ரோட்டுல போய் நின்னு கத்துவேன் என சொல்லி மிராட்ட, ஆதி குணசேகரன் அரண்டுபோகிறார். மறுபுறம் ஆஸ்பத்திரியில் உள்ள தர்ஷன், தர்ஷினி, ஜனனி ஆகியோர், ஈஸ்வரி எழுந்து வந்ததும் ஆதி குணசேகரனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார்கள். தன் அம்மாவை இந்த நிலமைக்கு கொண்டு வந்த அந்த ஆளை சும்மா விட மாட்டேன் என சொல்லி தர்ஷன் கண்ணீர் சிந்துகிறார்.

45
மீண்டு வந்த ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

மீண்டு வந்த ஈஸ்வரி

இந்த நேரத்தில் மருத்துவர் ஒரு குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார். ஈஸ்வரி குணமாகிவிட்டதாக சொன்னதும், அவரைப் பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அப்போது கதவை திறந்து வெளியே வருகிறார் ஈஸ்வரி. அவரைப் பார்த்ததும் தர்ஷினி அம்மா என ஓடி வந்து கட்டிப் பிடித்து கண்ணீர் சிந்துகிறார். பின்னர் ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் ஈஸ்வரியை பார்த்ததும் உற்சாக மிகுதியில் அவரை கட்டியணைத்து அழுகிறார்கள். சக்தியும் ஈஸ்வரி காலில் விழுந்து அழுகிறார். இந்த நாளுக்காக தான் நாங்கள் அனைவரும் காத்திருந்தோம் என சொல்லி ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

55
காத்திருக்கும் ட்விஸ்ட்
Image Credit : youtube/suntv

காத்திருக்கும் ட்விஸ்ட்

ஈஸ்வரி திரும்ப வந்துள்ளதால், இனி வீட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஈஸ்வரியை வைத்து ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பும் முடிவில் ஜனனி உள்ளார். அவருக்கு எதிராக ஈஸ்வரி சாட்சி சொல்வாரா? ஈஸ்வரி வீட்டுக்கு வந்ததும் அவரை போட்டுத் தள்ள ஆதி குணசேகரன் குரூப் முயலவும் வாய்ப்பு உள்ளது. அவரின் சதிகளை மீறி சிங்கப்பெண்ணாய் சாதிப்பாரா ஈஸ்வரி? அவரை வைத்து தமிழ் சோறு பிசினஸ் மீண்டும் தொடங்கப்படுமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐயோ, கார் விபத்தில் சிக்கிய ரேவதி – மனைவியை காணாமல் தவிக்கும் கார்த்திக்; நிஜமான சித்தர் வாக்கு; கார்த்திகை தீபம்; கண்ணீரில் ரசிகர்கள்!
Recommended image2
முடிவுக்கு வருகிறதா அன்புவின் அம்மாவின் அதிகாரம்? ஆனந்திக்கு கிடைத்த புதிய பொறுப்பு - சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட் அப்டேட்
Recommended image3
விஜயா மூஞ்சில் கரியை பூசிய மீனா.. டுபாக்கூர் சாமியாரால் சிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
ஆலிவரின் மாஸ்டர் மைண்ட் யார்? மதிவதினியால் மாட்டப்போகும் பெரும்புள்ளி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
ஆதி குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த விசாலாட்சி; ஈஸ்வரியால் தடம் மாறும் கதைக்களம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved