MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆதி குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த விசாலாட்சி; ஈஸ்வரியால் தடம் மாறும் கதைக்களம் - எதிர்நீச்சல் தொடர்கிறது

ஆதி குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த விசாலாட்சி; ஈஸ்வரியால் தடம் மாறும் கதைக்களம் - எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆஸ்பத்திரியில் இருக்கும் ஈஸ்வரி கண்விழிக்க உள்ள விஷயத்தை ஆதி குணசேகரனிடம் போட்டுடைத்துள்ளார் விசாலாட்சி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 25 2026, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்த ஜனனி, மீண்டும் கண்விழித்துள்ள நிலையில், அவருக்கு நடந்தவற்றை விவரித்துள்ளார் சக்தி. பின்னர் வீட்டில் உள்ள நந்தினியிடம் போன் போட்டு பேசிய ஜனனி, தான் நலமாக இருப்பதாக சொல்லி இருந்தார். இதையடுத்து ஜனனிக்காக விதவிதமாக சமையல் செய்து அதை பேக் பண்ணி எடுத்துச் சென்ற நந்தினி மற்றும் ரேணுகா, ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் போது, எங்க கிளம்பீட்டீங்க என கேட்டு முட்டுக்கட்டை போட்டார் கதிர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உளறிய நந்தினி
Image Credit : youtube/suntv

உளறிய நந்தினி

அவர்கள் நந்தினி கையில் இருக்கும் பையை பார்த்ததும் யாருக்காக சாப்பாடு எடுத்துட்டு போறீங்க என கேட்கிறார். அதற்கு, தர்ஷினியும் தர்ஷனும் ஈஸ்வரி அக்காவை பார்த்துக்கொள்ள மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தான் எடுத்துச் செல்கிறோம் என கூறுகிறார் நந்தினி. உடனே கதிர், இத்தனை நாள் கேண்டீன்ல தான வாங்கி சாப்பிட்டாங்க, இன்னைக்கும் அங்கேயே திங்க சொல்லு, இதுக்காக நீங்க ஒன்னும் கிளம்பி போக வேண்டாம் என கூறுகிறார். அதற்கு நந்தினி, தர்ஷனுக்கு வெளிசாப்பாடு ஒத்துக்கும், ஆனால் ஜனனிக்கு என உளறிவிடுகிறார். என்னது ஜனனியா என கதிரும் ஷாக் ஆகிறார்.

Related Articles

Related image1
ஆலிவரின் மாஸ்டர் மைண்ட் யார்? மதிவதினியால் மாட்டப்போகும் பெரும்புள்ளி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
35
ஜனனி திட்டவட்டம்
Image Credit : youtube/suntv

ஜனனி திட்டவட்டம்

பின்னர் அவர்களிடம் மழுப்பலான பதிலை சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்புகிறார் நந்தினி. அங்கு சென்றதும் ஜனனியுடன் சேர்ந்து அனைவரும் சாப்பிடுகிறார்கள். அப்போது ஈஸ்வரி பற்றி பேசும் தர்ஷன், அம்மாவை இந்த நிலமைக்கு ஆளாக்குன அந்த ஆள சும்மாவிடக்கூடாது என சொல்ல, அதற்கு ஜனனி, அம்மா எழுந்து வந்ததும் சட்டப்படி நம்ம என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுப்போம். அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம் என சொல்கிறார். அப்போது அருகில் இருந்த தர்ஷினி, இனிமேல் அந்த ஆளால் எதுவுமே செய்ய முடியாது சித்தி. அம்மாவை நான் பார்த்துப்பேன் என கூறுகிறார்.

45
ஷாக் ஆன ஆதி குணசேகரன்
Image Credit : youtube/suntv

ஷாக் ஆன ஆதி குணசேகரன்

இத்தனை நாட்களாக மாடியிலேயே முகாமிட்டிருந்த ஆதி குணசேகரன், ஒருவழியாக கீழே இறங்கி வந்து ஹாலில் டேரா போட்டுள்ள நிலையில், அவரிடம் உண்மையை போட்டுடைத்துள்ளார் விசாலாட்சி. ஈஸ்வரி கண்முழிக்க போகிறாள் என்று விசாலாட்சி சொன்னதும், வெடவெடத்துப் போகிறார் ஆதி குணசேகரன். அதைக்கேட்டதும் அருகில் இருந்த அறிவுக்கரசி, இதுக்காக தான் இந்த குலதெய்வ டிராமாவா என கேட்க, உடனே அவருக்கு பளார் என ஒரு அறைவிட்ட விசாலாட்சி, ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கிட்டு இரு, இல்லேனா அடிச்சு வெளிய துரத்திருவேன் என கூறுகிறார்.

55
மாறும் கதைக்களம்
Image Credit : youtube/suntv

மாறும் கதைக்களம்

தற்போது ஈஸ்வரி எண்ட்ரியால் கதைக்களமே மாற இருக்கிறது. அவர் திரும்பி வந்ததும், அவரிடம் வாக்குமூலம் வாங்கி ஆதி குணசேகரன் கைது செய்யப்படலாம். ஒருவேளை அவர் பழசை எல்லாம் மறந்திருந்தால், ஆதி குணசேகரன் தப்பிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர் மீது போடப்பட்ட குண்டாஸும் கேன்சல் ஆக வாய்ப்பு அதிகம். இதனால் ஆதி குணசேகரனின் எதிர்காலம் ஈஸ்வரி கையில் தான் இனி இருக்கிறது. அவரின் ரீ எண்ட்ரி வீட்டில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவரப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனாவுக்கு என்ன ஆச்சு? சிந்தாமணியிடம் சண்டையிட்ட முத்து - காத்திருந்த எதிர்பாரா திருப்பம்
Recommended image2
Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்
Recommended image3
Siragadikka Aasai : கடத்தப்பட்டாரா மீனா? வலைவீசி தேடும் முத்து; மனோஜுக்கு சேலஞ் பண்ணிய ரோகிணி..!
Related Stories
Recommended image1
ஆலிவரின் மாஸ்டர் மைண்ட் யார்? மதிவதினியால் மாட்டப்போகும் பெரும்புள்ளி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved